ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு தமிழகத்தில் திரைப்படங்களுக்குக் கேளிக்கை வரி 30 சதவீதமாக உயர்த்தப்பட்டது. பின்னர் எதிர்ப்பு கிளப்பவே 19 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.
19 கேளிக்கை வரி மக்களை அதிகளவில் பாதித்த காரணத்தால் தியேட்டருக்கும் வரும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக குறைய துவங்கியது. இதனை அடுத்து தமிழ் திரைப்பட துறையில் தமிழ அரசுக்கு கொடுத்த தொடர் கோரிக்கை மற்றும் திரைப்படங்கள் வெளியிடாமல் போராட்டத்தில் ஈடுப்பட்ட காரணத்தினால் தற்போது தமிழக அரசு எண்டர்டெயின்மென்ட் டாக்ஸ் எனப்படும் கேளிக்கை வரியை 8 சதவீதமாக குறைத்துள்ளது.
இதன் மூலம் இனி திரையரங்கம் நிர்ணயம் செய்யும் கட்டணம், 28 சதவீத ஜிஎஸ்டி வரி, மாநில அரசு விதிக்கும் 8 சதவீத கேளிக்கை வரி மட்டுமே விதிக்கப்பட உள்ளது.
இந்த அறிவிப்பால் பிவிஆர் மற்றும் ஐனாக்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் இன்று தடாலடியாக உயர்ந்துள்ளது.
போராட்டம்
திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் ஐனாக்ஸ் மற்றும் பிவிஆர் உள்ளிட்ட திரை அரங்குகள் அக்டோபர் 1 முதல் கேளிக்கை தமிழக அரசு அறிவித்து இருந்த கேளிக்கை வரி 19 சதவீதம் அமலுக்கு வந்ததால் 40 சதவீதத்திற்கு அதிகமாக வரி கட்ட வேண்டும் எனவே அதனைக் குறைக்க என்று போராட்டம் நடத்தி வந்தன.
தமிழக அரசு முந்தைய அறிவிப்பு
இதனை அடுத்து தமிழக அரசு வேண்டும் என்றால் திரை அரங்கு டிக்கெட் கட்டணத்தினை வேண்டும் என்றால் உயர்த்திக்கொள்ளுங்கள் என்று அறிவித்தது.
விஷால்
இதனால் திரைப்படத்தினைப் பார்க்க வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து விடும் என்பதால் இன்று காலை தயாரிப்பாளர் சங்க தலைவரான விஷால் திரை அரங்குகள் அரசு நிர்னையத்த கட்டணத்தினை மட்டும் தான் வசூலிக்க வேண்டும், உணவுப் பொருட்கள் எம்ஆர்பி விலையில் தான் விற்க வேண்டும், வாகன பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றெல்லாம் அறிக்கை விட்டு இருந்தார்.
குறைக்கப்பட்ட வரி
இதற்கு நடுவில் அரசுடன் நடந்து வந்த பேச்சுவார்த்தையில் தமிழ் திரைப்படங்களுக்கு 10 சதவீதத்திற்கும் குறைவாகவும் மற்ற மொழி திரைப்படங்களுக்கு 20 சதவீதம் வரி விதிக்கலாம் என்பதில் சுமுக முடிவு ஏற்பட்டு 19 சதவீதமாக இருந்த கேளிக்கை வரியைப் பாதிக்கும் குறைவாக 8 சதவீதம் என்று குறைத்துள்ளனர்.
பிவிஆர்
கேளிக்கை வரி குறைத்ததை அடுத்து பிவிஆர் பங்குகள் விலை 3.91 சதவீதம் என 52.80 புள்ளிகள் உயர்ந்து 1,403.15 புள்ளிகளாக வர்த்தகம் ஆனது.
ஐனாக்ஸ் லீசியர்
ஐனாக்ஸ் லீசியர் நிறுவனப் பங்குகள் 3.8 சதவீதம் என 8.90 புள்ளிகள் உயர்ந்து 243 புள்ளிகளாக வர்த்தகம் ஆனது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications