நாட்டின் முன்னணி மொபைல் வேலெட் மற்றும் ஈகாமர்ஸ் நிறுவனமான பேடிஎம், இந்தத் தீபாவளி மற்றும் தன்திரியாஸ் நாட்களில் தங்கம் விற்பனை 5 மடங்கு அதிகமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.
எம்எம்டிசி நிறுவனம்
இதன் மூலம் பேடிஎம் ஏற்கனவ தங்கத்தை இறக்குமதி செய்யும் அரசு நிறுவனமான எம்எம்டிசி உடன் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், இந்நிறுவனத்துடன் இணைந்து பேடிஎம் தளத்தில் வாடிக்கையாளர்களுக்குத் தங்கத்தை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
10 கோடி ரூபாய்
தங்க விற்பனையில் மட்டும் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்க பேடிஎம் சுமார் 10 கோடி ரூபாயை மார்கெட்டிங்-கிற்காக மட்டும் முதலீடு செய்துள்ளது.
தங்கம் விற்பனை
இந்தியாவில் தங்கத்தின் தேவை எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் அதிகரித்துள்ள நிலையில், இந்தத் தீபாவளியில் தங்கம் அதிகளவில் விற்பனையாகும் எனத் தெரிகிறது.
5 மடங்கு உயர்வு
ஒவ்வொரு மாதமும் பேடிஎம் நிறுவனத்தில் தங்கத்தின் மீதான விற்பனையின் எண்ணிக்கை 20 லட்சமாக இருக்கும் நிவையில், இந்தத் தீபாவளியில் இதன் எண்ணிக்கை 5 மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகப் பேடிஎம் தெரிவித்தார்.
வட இந்தியா
தீபாவளிக்கு முந்தைய நாளில் தன்திரியாஸ் என்னும் பண்டிகை வருகிறது. இந்நாளில் மக்கள் அதிகளவிலான பணத்தைத் தங்கத்திலும், இதர உலோகங்களிலும் முதலீடு செய்வார்.
இந்த வழக்கம் பொதுவாக வட இந்தியாவில் மட்டும் அதிகளவில் பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications