இந்தியா ஒரு விவசாய நாடு என்பது எல்லாம் என்றோ பழையது ஆகிவிட்டது, இன்று வாசயத்திற்கு மதிப்பு என்தே இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது.
ஒரு பக்கம் படித்து, ஐடி மற்றும் பிற துறைகளில் வேலை பார்க்க பிடிக்காமல் இளைஞர்கள் விவசாயம் பக்கம் வந்தாலும் அவர்களைப் பார்த்துச் சிரிப்பவர்கள் தான் அதிகம்.
வருவாய் குறைவு
ஆனால் நாடு முழுவதும் விவசாயிகள் கடனில் சிக்கித் தவித்து வருகின்றனர், அதே நேரம் விவசாயத்தில் பெரிதாக வருவாயும் இல்லை. அனைத்து மாநிலங்களிலும் விவசாயிகள் கடன் வாங்குவது தொடர்கதை ஆகியுள்ளது. அதே நேரம் மத்திய அரசு விவசாயக் கடனுக்கு மானியம் அளிக்க முன் வரவில்லை என்றாலும் மாநில அரசுகள் கடன் அளிக்கின்றனர்.
டாப் இரண்டு மாநிலம்
இந்திய ரிசர்வ் வங்கியுடைய அறிக்கையின் படி 2015-2016 நிதி ஆண்டில் விவசாயக் கடன் வாங்கியவர்களில் உத்திர பிரதேசம் மற்றும் தமிழ் நாடும் தான் அதிகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மொத்த கடன் மதிப்பு
வங்கிகள் மொத்தமாக 8.94 லட்சம் கோடி ரூபாய் வரை கடன் அளித்துள்ளன. அதிலும் 50 சதவீதத்தைக் கடன் உத்திரபிரதேசம், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் ஆந்திரபிர்தேச மக்கள் தான் வாங்கியுள்ளனர்.
கடன் பெற்ற விவசாயிகள்
ஆர்பிஐ வங்கியின் அறிக்கையின் படி 40 சதவீத கடனை சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் பெற்றுள்ளனர். சராசரியாக இந்த விவசாயிகள் 2 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றுள்ளனர்.
தள்ளுபடி
உத்திரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் ஆட்சிக்கு வந்த பிறகு 1 லட்சம் ரூபாய் வரையிலான சிறு மற்றும் நடத்தர விவசாயிகள் வாங்கியுள்ள கடனை தள்ளுபடி செய்துள்ளார். அதே நேரம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கியுள்ள கடனுக்குத் தள்ளுபடியினை அறிவித்துள்ளார்.
குறையாத பிரச்சனை
ஆனாலும் விவசாயிகள் வாங்கியுள்ள கடன் பிரச்சனை குறையவில்லை. பல விவசாயிகள் கடனை திருப்பி அளிக்க முடியாமல் இறக்கும் செய்திகள் ஒரு பக்கம் வந்துகொண்டு தான் உள்ளது.
கடன் வாங்கியுள்ள முக்கிய மாநிலங்களின் அளவீடு
| மாநிலம் | கடன் |
|---|---|
| தமிழ்நாடு | 11.40% |
| உத்திர பிரதேசம் | 11.30% |
| மகாராஷ்டிரா | 9.00% |
| பஞ்சாப் | 8.70% |
| ஆந்திர பிரதேசம் | 8.50% |
தள்ளுபடி செய்துள்ள கடன் தொகை
| மாநிலம் | கடன் |
|---|---|
| உத்திரபிரதேசம் | 36,000 கோடி |
| மகாராஷ்டிரா | 34,000 கோடி |
| பஞ்சாப் | 10,000 கோடி |
| கர்நாடகா | 8,000 கோடி |
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications