இந்தியாவில் தீபாவளி பண்டிகையன்று தங்கம் விற்பனை அதிகமாக இருக்கும், அதுவும் கிராமம் மற்றும் சிறு டவுன் பகுதிகளில் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த வருடத்தின் தீபாவளி பண்டிகையன்று தங்கம் விற்பனை 30 சதவீதம் வரை குறைந்துள்ளது.
காரணம்
பணமதிப்பிழப்பு மூலம் ஏற்பட்ட மாற்றங்கள், ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பின்பு தங்கம் விலையில் ஏற்பட்ட உயர்வு, அக்டோபர் மாதத்தில் (தவறான காலத்தில்) பெய்த மழை ஆகியவை தங்கம் விற்பனையை நேரடியாகப் பாதித்துள்ளது.
முக்கிய நாட்கள்
இதுவும் இந்த வருடம் தந்திரீயாஸ் நாட்களில் கூடத் தங்கம் விற்பனை மிகவும் குறைவாக இருந்ததாக நகை கடைக்காரர்கள் தெரிவித்தனர். இந்தியாவில் அக்ஷய திருதியை மற்றும் தந்திரீயாஸ் நாட்களில் மக்கள் அதிகளவில் தங்கத்தை வாங்குவார்கள், இந்த இரு சிறப்பு நாட்களும் அறுவடைக்கு இணைப்புள்ள நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
திடீர் மழை
அக்டோபர் மாதத்தில் மழை பெய்த மாநிலங்களில் தங்கம் விற்பனை 50 சதவீதம் வரை குறைந்துள்ளது, இந்தியா முழுவதுமான விற்பனையில் 30 சதவீதம் சரிந்துள்ளது மொத்த தங்க நகை விற்பனையும் மந்தமான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டது என அனைத்து இந்திய ரத்தினம் மற்றும் நகை விற்பனை அமைப்பின் தலைவர் நித்தின் கந்தெல்வால் தெரிவித்தார்.
வோல்டு கோல்டு கவுன்சில்
உலகத் தங்க அமைப்பின் ஆய்வின் படி இந்த வருடம் இந்தியாவில் தங்கத்தின் தேவை சுமார் 650-750 டன் அளவில் இருக்குமெனத் தெரிவித்துள்ளது. இதில் 60 சதவீதம் கிராமங்களில் விற்பனையாகும் எனவும் கூறியுள்ளது.
வரி..
இந்த வருட தீபாவளி பண்டிகையின் போது தங்கம் மற்றும் தங்க நகை விற்பனையில் ஏற்பட்டுள்ள சரிவிற்கு முக்கியக் காரணமாக 3 சதவீத ஜிஎஸ்டி வரிப் பெரும்பான்மை மக்களாலும் சுட்டிக்காட்டப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!



Click it and Unblock the Notifications