தங்கத்தினை இறக்குமதி செய்பவர்கள் அவற்றை மீண்டும் ஏற்றுமதி மட்டுமே செய்ய வேண்டும் என்றும் உள்நாட்டுச் சந்தையில் விற்பனை செய்யக் கூடாது என்றும் புதன் கிழமை மத்திய அரசு தங்கம் இறக்குமதிக்கு அனுமதிக்கப்பட்டுள்ள முகவர்களுக்கான வரைமுறைகளை இறுக்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

எனவே இனி தங்கத்தினை உற்பத்திக்காக இறக்குமதி செய்து அதனை மீண்டும் குறிப்பிட்ட காலத்திற்குள் ஏற்றுமதி செய்துவிட வேண்டும் மத்திய அரசின் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தங்கம் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்ட சில முகவர்கள் இந்தியாவுடன் இலவச வணிக ஒப்பந்தம் போட்டுள்ள நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்து அதனை இந்தியாவில் விற்பதினால் இறக்குமதி வரி போன்றவற்றில் விலக்கு பெறுகின்றார்கள் இதனைத் தடுக்கவே புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
உலகளவில் தங்கம் பயன்படுத்துவதில் சீனாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இந்தியா தான் உள்ளது. 2017-ம் ஆண்டில் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 75 டன் வரை இந்தியாவில் தங்கம் மீதான தேவை உள்ளது, இதுவே சென்ற வருடம் செப்டம்பர் மாதம் வரை 48 டன் ஆக இருந்தது.


Click it and Unblock the Notifications