இந்திய ரிசர்வ் வங்கி சனிக்கிழமை வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது கருப்புப் பணத்தினைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் கட்டாயம் என்றும் நேற்று ஊடகங்களில் ஆதார், பான் இணைப்பு தேவையில்லை என்று ஆர்பிஐ அறிவித்துள்ளதாக வந்த செய்தியினை மறுத்துள்ளது.
வங்கி கணக்கை ஆதார் எண்ணுடன் இணைப்பது 2017-ம் ஆண்டின் பணமோசடி சட்ட இரண்டாவது விதியின் கீழ் இணைப்பது கட்டாயம் என 2017 ஜூன் 1ம் தேதி அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
ஆர்பிஐ
2017-ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி ஆர்பிஐ பண மோசடி சட்டத்திற்கான அரசாணை வெளியானதை அடுத்து வங்கிகளை வற்புறுத்தி ஆதார் பான் இணைப்பினை கட்டாயமாகச் செய்ய வேண்டும் என்று கூற வைத்துள்ளது என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
காலக்கெடு
பண மோசடி சட்டத்தின் கீழ் 2017 டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஆர்டிஐ
இந்திய ரிசர்வ் வங்கியின் மறுப்பு ஆர்டிஐ இடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வியினை அடுத்து வெளிவந்துள்ளது. எனவே ஆதார் வங்கி கணக்கு இணைப்புக் கட்டாயம் ஆகும்.
உச்ச நீதிமன்றம்
தனித்த அடையாள அடையாள ஆணையம் (UIDAI) வழங்கிய 12 இலக்க எண்ணை வங்கி கணக்குகள் மற்றும் மொபைல் போன்களை இணைக்க அரசு எடுத்துள்ள முடிவை எதிர்த்து அக்டோபர் 14 தேதி அன்று உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications