இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் தனியார் வங்கி நிறுவனமான எச்டிஎப்சி இரண்டால் காலாண்டில் சென்ற வருடத்தினை விட 20 சதவீதம் வரை கூடுதல் லாபம் பெற்றுள்ளது எனத் தெரிவித்துள்ளது.
2016-2017 நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் எசிடிஎப்சி வங்கி 3,455 கோடி ரூபாய் நிகர லாபம் பெற்று இருந்தது. இதுவே 2017-2018 நிதி ஆண்டில் 4,151 கோடி நிகர லாபம் பெற்றுள்ளது.
நிகர வட்டி வருமானம்
ஒரு வருடத்தில் நிகர வட்டி வருமானம் 22 சதவீதம் வரை உயர்ந்து 9,752 கோடியினைப் பெற்றுள்ளது.
மொத்த வருவாய்
நடப்புக் காலாண்டில் வங்கியின் மொத்த வருவாய் 23,276 கோடி ரூபாய் எனவும் இதுவே சென்ற நிதி ஆண்டில் இதுவே சென்ற ஆண்டு19,970.9 கோடியாக இருந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடன்
சில்லறை கடன்கள் மற்றும் மொத்த கடன்கள் முறையே 21.6 சதவீதம் மற்றும் 23.6 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது.
அரையாண்டு அறிக்கை
செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்துள்ள அரையாண்டில் வங்கியின் லாபம் 22.2 சதவீதம் வரை உயர்ந்து 8,045 கோடியாக உள்ளது என்றும் இதுவே சென்ற நிதி ஆண்டில் 6,694 கோடியாக இருந்தது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த வருவாயும் சென்ற வருடத்துடன் ஒப்பிடும் போது 39,293.5 கோடியில் இருந்து 45,461.5 கோடியாக அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications