ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் முதலீடு செய்ய 320 கோடி நிதியை சேர்த்த எண்ணெய் நிறுவனங்கள்..!
இந்தியாவில் இருக்கும் 10 எண்ணெய் நிறுவனங்கள் இணைந்து 320 கோடி ரூபாய் அளவிலான நிதியை சேர்த்து எண்ணெய் மற்றும் எரிவாயு துறையை சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்த முதலீடு அடுத்த 3 வருடத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது எண்ணெய் நிறுவனங்கள்.

எண்ணெய் நிறுவனங்கள் சேகரித்த 320 கோடி ரூபாய் முதலீட்டை 36 திட்டங்களில் (ஸ்டார்ட் அப்) முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த நிதி அளவீடுகள் தேவைக்கு ஏற்று அதிகரிக்கவும் செய்யும் என எண்ணெய் வள துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
இந்த முதலீடுகள் இத்துறையில் புதிமைகளை கொண்டு வரவும், புதிய வர்த்தக திட்டங்ளகளையும் உருவாக்க இது மிகப்பெரிய அளவில் உதவும் என எண்ணெய் வர்த்தக துறை நம்புகிறது.


Click it and Unblock the Notifications