ஜிஎஸ்டி அமலுக்கு வந்துள்ளதை ஒழுங்குபடுத்துவதற்காக அமைக்கப்பட்ட மத்திய அமைச்சர்களைக் கொண்ட குழு ஞாயிற்றுக்கிழமை பொருட்கள் உற்பத்தி செய்யும் சிறு நிறுவனங்கள் மற்றும் உணவகங்கள் மீதான ஜிஎஸ்டி வரியைக் குறைக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.
தற்போது உற்பத்தியாளர்கள் 2 சதவீத ஜிஎஸ்டி-ஐ செலுத்தி வருகின்றனர், உணவகங்கள் 5 சதவீதம் ஜிஎஸ்டி-ஐ செலுத்தி வருகின்றனர். வர்த்தகர்கள் 1 சதவீதம் ஜிஎஸ்டி-ஐ செலுத்தி வருகின்றார்கள்.
ஏசி உணவகங்கள்
ஜிஎஸ்டி பரிந்துரை குழுவில் உள்ள அசாம் நிதி அமைச்சர் ஹிம்மந்தா பிஸ்வா ஷார்மா ஏசி மற்றும் ஏசி அல்லாது உணவகங்களில் மீது 12 சதவீத ஜிஎஸ்டி-ஐ விதிக்க வேண்டும் என்றும் காம்ப்போசிஷன் கீழ் கொண்டு வர வேண்டும் பரிந்துரைத்துள்ளார்.
தங்கும் விடுதிகள்
7,500 ரூபாய்க்கும் அதிகமான கட்டணம் வசூலிக்கும் தங்கும் விடுதிகளில் 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கலாம் என்று பரிந்துரைத்துள்ளது. உற்பத்தியாளர்கள், ரெஸ்டாரண்டுகள் மற்றும் வணிகர்களுக்கு உள்ள 75 லட்சம் ரூபாய் ஜிஎஸ்டி தொடக்க நிலையினை 1 கோடியாக உயர்த்தவும் பரிந்துரைத்துள்ளனர்.
காம்போசிஷன் திட்டம் என்றால் என்ன?
சாதாரணமாக ஜிஎஸ்டி வரியை ஒவ்வொரு மாதமும் செலுத்த வேண்டும். இதுவே காம்ப்போஷிஷன் கீழ் வரும் வணிகர்கள் ஒவ்வொரு காலாண்டிற்கும் வரி செலுத்தினால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது.
காம்போசிஷன் கீழ் வரும் வரி செலுத்துனர்கள் சாதாரணமாக வரி செலுத்துவதைப் போன்று அனைத்து விவரங்களை வைத்திருக்க வேண்டும் மற்றும் சமர்ப்பிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.
ஃப்ரீலான்ஸர்கள்
வேலைக்கான ஆர்டர்கள் எடுத்து பணிபுரியும் நிறுவனங்கள், ஃப்ரீலான்ஸர்கள் உள்ளிட்டவர்களைக் காம்ப்போசிஷன் திட்டத்தின் கீழ் கண்டு வர வேண்டும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications