பணிக்குத் தாமதமாக வருபவர்களைக் கண்காணிக்க ரயில்வே நிர்வாகம் 2018-ம் ஆண்டு ஜனவரி 31 முதல் ஆதார் - பையோமேட்ரிக் மூலமாக வருகை பதிவு செய்ய வேண்டும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கான அறிவிப்புக் கடிதத்தினை ரயில்வே நிர்வாகம் நவம்பர் 3ம் தேதி அனைத்துப் பகுதி நிர்வாகங்களுக்கு அனுப்பியுள்ளது.
அறிவிப்பு
ரயில்வே அமைச்சகத்தின் இந்த உத்தரவின் படி அனைத்துப் பகுதி, மண்டலம், கொல்கத்தா மெட்ரோ ரயில், ரயில்வே பட்டறைகள், தொழிற்சாலைகள், அலுவலகங்கள் என அனைத்து இடத்திலும் நவம்பர் 30-க்குள் பையோமெட்ரிக் வருகை பதிவு இயந்திரங்களைப் பொருத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
எதற்காக?
ஆதார் வருகை பதிவு முறையினை நடைமுறைப்படுத்தி ஊழியர்கள் தாமதாக வருகின்றார்களா என ரயில்வே அமைச்சகம் கண்காணிக்க உள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சோதனை
நவம்பர் 30-க்குள் மண்டல அலுவலகங்களில் ஆதார் பையோமெட்ரிக் வருகை பதிவேடு முறை நிறுவப்பட்டுச் சோதனை செய்து அதில் உள்ள சிக்கல்களைக் கண்டறிந்து தீர்வு காண முடிவு செய்யப்பட்டுள்ளது.
எப்போது முதல் நடைமுறைப்படுத்தப்படும்?
அதேவேலையில் 2018 ஜனவரி 31-க்குள் அனைத்து ரயில்வே அலுவலகங்களில் ஆதார் பையோமெட்ரிக் வருகை பதிவேடு முறை நிறுவப்பட்டு இருக்க வேண்டும். 2018 ஜனவரி 31 முதல் முழுஐயாக இந்தப் பதிவேடு முறை நடைமுறைப்படுத்தப்படும்.
தற்போது ஆதார் பையோமெட்ரிக் வருகை பதிவேடு முறையானது சில மண்டல அலுவலகங்களில் நிறுவப்பட்டுச் சோதனை செய்யப்பட்டு வருகின்றது.
சிசிடிவி
ஆதார் பையோமெட்ரிக் பதிவேட்டை சிசிடிவி கேமரா அமைத்து கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications