என்னது பெண்கள் ஆண்களுக்கு சமமான ஊதியத்தை பெற இன்னும் 217 ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமா?

சென்னை: இந்த வாரம் இந்திய பொருளாதாரம் இரண்டு செய்திகளை எதிர் கொண்டது. அதில் ஒன்று நல்ல செய்தி. மற்றொன்று உங்களுக்கே தெரியுமே. நாம் இந்த இரண்டாவது செய்தியைப் பற்றி இங்கு விரிவாகப் பார்க்கப் போகின்றோம். அதற்கு முன் அந்த முதலாவது செய்தி. உலக அளவில் மிகவும் எளிதாகத் தொழில் தொடங்கக் கூடிய நாடுகளின் பட்டியலில் இந்தியா கணிசமாக முன்னேறி உள்ளது. இப்பொழுது அந்த இரண்டாவது செய்தி.

உலகப் பொருளாதாரக் கருத்துக்களம் (WEF) வெளியிட்ட செய்திக் குறிப்பின் படி ஒட்டுமொத்த உலகளாவிய பாலியல் இடைவெளி குறியீட்டின் தரத்தில் இந்தியா 21 இடங்கள் பின்தங்கி 108 வது தளத்தில் உள்ளது. இந்த இடம் இந்தியாவின் அண்டை நாடுகளான சீனா மற்றும் வங்காதேசத்தை விட மிகவும் குறைவாகும். இந்தப் பாலின இடைவெளியைக் கணிக்கப் பொருளாதாரத்தில் பெண்களின் பங்கு மற்றும் அவர்களின் மிகக் குறைந்த ஊதியம் கணக்கிடப்படுகின்றது.

2 நூற்றாண்டு காத்திருப்பு

2 நூற்றாண்டு காத்திருப்பு

WEF அறிக்கையின் படி, உலகெங்கிலும் உள்ள பெண்கள், தங்களுடைய பணியிடத்தில் சமத்துவத்தை அடைவதற்கு இன்னும் இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேல் காத்திருக்க வேண்டியிருக்கலாம். இந்தியாவில், பணியாற்றும் பாலின இடைவெளியைக் கணக்கிடும் பொழுது பொருளாதாரத்தில் பெண்களின் மிகக் குறைந்த பங்களிப்பு (144 நாடுகளில் 136 ம் இடம்) மற்றும் பெண் பணியாளர்களுக்கான குறைந்த ஊதியம் (மதிப்பிடப்பட்ட வருமானத்தில் 136 வது தரவரிசை), போன்றவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. சராசரியாக, இந்தியாவில் வேலை பார்க்கும் பெண்களில் 66 சதவிகிதத்தினருக்கு ஊதியம் கொடுக்கப்படுவதில்லை, இதுவே ஆண்களைப் பொருத்தவரை சுமார் 12 சதவிகிதம் ஆகும் என WEF அறிக்கை தெரிவிக்கின்றது.

பாலின இடைவெளி அதிகம் உள்ள இடங்கள்

பாலின இடைவெளி அதிகம் உள்ள இடங்கள்

சட்டமன்ற உறுப்பினர்கள், மூத்த அதிகாரிகள் மற்றும் மேலாளர்கள் மற்றும் தொழில்முறை மற்றும் தொழில்நுட்ப தொழிலாளர்கள் போன்ற துறைகளில் பெண்களின் பங்கு மிகவும் குறைவாக அதாவது இந்தத் துறைகளில் இந்தியாவின் பாலின இடைவெளி அதிக அளவாக உள்ளது. பொருளாதார வாய்ப்பு மற்றும் பங்களிப்புகளில் சமநிலையை அடைய தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை இது வலியுறுத்துகிறது.

நம்முடைய நிலை என்ன?

நம்முடைய நிலை என்ன?

ஆய்வறிக்கையின் படி, இந்தியாவின் பாலின விகிதாச்சார வித்தியாசத்தில் சுமார் 67 சதவீதத்தை இந்தியா சரி செய்து விட்டது. இது இந்தியாவின் அண்டை நாடுகளை ஒப்பிடும் பொழுது மிகவும் குறைவாகும். இந்த விகிதாசார இடைவெளியில் நம்முடைய அண்டை நாடுகளான வங்கதேசம் 47 வது இடத்திலும், சீனா 100 வது இடத்திலும் உள்ளது.

உலகளாவிய ரீதியில் பாலின இடைவெளி எவ்வாறு உள்ளது?

உலகளாவிய ரீதியில் பாலின இடைவெளி எவ்வாறு உள்ளது?

உலகளாவிய ரீதியாக, இந்த ஆண்டு நிலை ஒன்றும் சொல்லிக் கொள்ளும் படி இல்லை. இந்தப் பாலின இடைவெளியை அளவிட ஆரம்பித்ததிலிருந்து முதன்முறையாக உலகெங்கிலும் இந்தப் பாலின இடைவெளி உண்மையில் பரவலாக உள்ளது. நான்கு தூண்கள் எனப்படும் சுகாதார, கல்வி, பணியிடங்கள் மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் போன்றவற்றில் இந்தப் பாலின இடைவெளி அதிக அளவில் உள்ளது. "பாலினங்களுக்கு இடையேயான சமத்துவத்தை மேம்படுத்த எடுக்கப்பட்ட மெதுவாக ஆனால் நிலையான முன்னேற்றம் இந்த 2017 ஆம் ஆண்டில் மிகவும் குறைந்து விட்டது. உலகின் பாலின இடைவெளி அறிக்கை 2006 ம் ஆண்டு முதன்முறையாக வெளிவிடப்படதிலிருந் முதன் முறையாகப் பாலின இடைவெளி அதிகமாக உள்ளது.

அறிக்கையின் கண்டுபிடிப்புகள்

அறிக்கையின் கண்டுபிடிப்புகள்

இன்று வெளியிடப்பட்ட இந்த ஆண்டு அறிக்கையில் உலகளாவிய பாலின இடைவெளிகளில் 68 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டை ஒப்பிடும் பொழுது இது 68.3 சதவீதமாக இருந்தது.

பட்டியலில் யாருக்கு முதலிடம்

பட்டியலில் யாருக்கு முதலிடம்

உலகளாவிய பாலின இடைவெளி குறியீட்டில் ஐஸ்லாந்து முதலிடத்தில் உள்ளது. அந்த நாடு பாலின இடைவெளியில் கிட்டத்தட்ட 88 சதவிகிதத்தைக் குறைத்துள்ளது. அந்த நாடு கடந்த ஒன்பது ஆண்டுகளாக உலகில் முகவும் குறைவான பாலின இடைவெளி நிலவும் நாடுகளி முதலிடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் உள்ள முதல் பத்து நாடுகளாவன: நோர்வே (2), பின்லாந்து (3), ருவாண்டா (4) மற்றும் ஸ்வீடன் (5), நர்ரகுவா (6) மற்றும் ஸ்லோவேனியா (7), அயர்லாந்து (8), நியூசிலாந்து (9) மற்றும் பிலிப்பைன்ஸ் (10).

சில நல்ல செய்திகள்

சில நல்ல செய்திகள்

இந்தியா தொடர்ந்து இரண்டாண்டுகளாக ஆரம்பக் கல்விக்கான பாலின இடைவெளிகளை முழுவதுமாகக் குறைத்துள்ளது. இது மிகவும் நல்ல செய்தியாகும். அதோடு முதல் முறையாக அதன் மூன்றாம் நிலை கல்வியில் பாலின இடைவெளியைக் குறைத்துள்ளது. இருப்பினும், இந்தியா பொதுச் சுகாதாரம் மற்றும் உயிரிழப்பு போன்ற துறைகளில் இது கடைசி நான்காம் இடத்தில் உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+