இந்தியாவில் மூன்றாம் காலாண்டில் தங்கம் தேவை 24 சதவீதம் சரிந்து 145.9 டன்னாக இருப்பதாக உலகத் தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
இதற்கு முக்கியக் காரணமாக ஜிஎஸ்டி அமலுக்கு வந்தது, பண மோசடி சட்டம் கடுமையாகப் பின்பற்றுவது போன்றவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016
2016-ம் ஆண்டில் மூன்றாவது காலாண்டில் இந்தியாவில் பண மதிப்பு நீக்க நடவடிக்கை எடுத்து இருந்த சமயத்தில் 193 டன்னாகத் தங்கத்தின் தேவை இருந்தது.
நகை தேவை
தங்க நகையின் தேவையும் 2016-ம் ஆண்டு 152.7 டன்னாக இருந்ததாம். இதுவே 2017-ம் ஆண்டு 25 சதவீதம் சரிந்து 114.9 டன்னாக உள்ளது.
தங்கம் மறுசுழற்சி
2016-ம் ஆண்டு 25.7 டன்னாக இருந்த தங்க நகை மறுசுழற்சி 2017-ம் ஆண்டு 26.7 டன்னாக அதிகரித்துள்ளது.
2018
2017-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் தங்கத்தின் தேவை 2018-ம் ஆண்டு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஹால்மார்க்
எனினும் மத்திய அரசும் தங்க நகை வாங்கும் போது ஹால்மார்க் குறியீட்டுடன் எண்தனை காரட் தங்கம் என்பதையும் குறிப்பிட வேண்டும் என்ற புதிய விதியினை 2018-ம் ஆண்டு முதல் கொண்டு வர முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications