நாட்டின் மறைமுக வரியை முழுமையாக மாற்றிய ஜிஎஸ்டி வரி அமலாக்கம் செய்யப்பட்ட பின்பு 28 சதவீத வரிப் பட்டியலில் இருக்கும் 227 பொருட்களின் வர்த்தகம் அதிகளவில் குறைந்தது.
இதனால் ஜூலை மாதம் முதல் அரசுக்கு சுமார் 20,000 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளது. இதன் மூலம் இன்று நடந்த முக்கிய 23வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
28 சதவீத வரி
இனி 28 சதவீத வரிப் பட்டியலில் பாதிப்புகள் ஏற்படுத்தக்கூடிய Sin tax பொந்தக்கூடிய பொருட்கள் மட்டுமே இருக்கும். இதுவரை இப்பிரிவில் இருந்த பிற பொருட்கள் அனைத்தும் 18 சதவீத வரியின் கீழ் மாற்ற ஜிஎஸ்டி கவுன்சில் 20,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பை முக்கியக் காரணியாகக் கொண்டு இந்த முடிவை ஒரு மனதாக எடுத்துள்ளது.
227 பொருட்கள்
தற்போது ஜிஎஸ்டியின் 28 சதவீத வரியின் கீழ் சுமார் 227 பொருட்கள் உள்ளது இதில் 175 பொருட்கள் 18 சதவீதத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக ஜிஎஸ்டி கவுன்சிலில் உறுப்பினராக இருக்கும் பீகார் மாநிலத்தின் நிதியமைச்சரான சுஷில் குமார் மோடி தெரிவித்துள்ளார்.
முக்கியப் பொருட்கள்
இந்தப் புதிய மாற்றத்தின் மூலம் சாக்லெட், சுவிங்கம், ஆப்டர் ஷேவ், அழகு பொருட்கள், பவுடர், டிட்டர்ஜென்ட் மற்றும் மார்பல் ஆகியவை தற்போது 18 சதவீதத்தின் கீழ் தள்ளப்படும்.
52 பொருட்கள் மட்டுமே
இந்நிலையில் இப்புதிய மாற்றத்திற்குப் பின் 28 சதவீத வரி பட்டியலின் கீழ் வெறும் 52 பொருட்கள் மட்டுமே இருக்கும்.
இதில் சிகரெட், ஏர் கன்டிஷன், வாஷிங் மெஷின், பெயின்ட் மற்றும் சிமென்ட் ஆகிய பொருட்கள் அடங்கும்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது



Click it and Unblock the Notifications