ஜிஎஸ்டி வரியின் புதிய மாற்றத்தில் மக்களுக்கு கிடைத்த நன்மைகள்..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

இந்தியாவில் பல வருடங்களாக நடைமுறையில் இருந்து வந்த மறைமுக வரியை, ஜிஎஸ்டி வரி அமைப்பின் மூலம் முழுமையாக மாற்றப்பட்டது. இதில் 0% முதல், அதிகப்படியாக 28 சதவீதம் வரையிலான வரி விதிக்கப்பட்டு வந்த நிலையில், மக்கள், உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் அதிகளவிலான பாதிப்பை சந்தித்து வந்தனர்.

குறிப்பாக 28 சதவீதத்தின் கீழ் இருக்கும் பொருட்களின் விற்பனை அதிகளவில் குறைந்து மத்திய அரசுக்கு சுமார் 20,000 கோடி ரூபாய் அளவிலான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

வரிக் குறைப்பு

இதனால் வெள்ளிக்கிழமை நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 28 சதவீத வரி பட்டியலின் கீழ் இருக்கும் 228 பொருட்களில் சுமார் 178 பொருட்களை 18 சதவீத வரிப் பட்டியலில் மாற்றியுள்ளது.

இந்த வரி மாற்றத்தின் மூலம் சமானியர்களுக்கு எந்தெந்த பொருட்களை வாங்குவதன் மூலம் பணம் மிச்சப்படுத்தலாம் என்பதே இப்போது பார்க்கலாம்.

 

ஹோட்டல்

ஹோட்டல்களில் தற்போது 12 மற்றும் 18 சதவீத வரி வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் வெள்ளிக்கிழமை அறிவிப்பின் மூலம் ஏசி மற்றும் ஏசி இல்லாத உணவகங்களில் இனி 5 சதவீதம் வரி மட்டுமே வசூலிக்கப்படும்.

உணவைக் கொண்டு செல்லும் உணவகங்கள், 7,500க்கும் அதிகமான கட்டணம் வசூல் செய்யும் ஹோட்டல் உணவகங்களிலும் 5 சதவீத வரி மட்டுமே விதிக்கப்பட உள்ளது.

இந்தப் பிரிவில் இருப்பவர்களுக்கு இன்புட் டாக்ஸ் கிரெடிட் வசதி இல்லை.

 

மதுபானம் உடன் ஹோட்டல்

மதுபான வழங்கும் ஹோட்டல்களில் ஏசி இருந்தால் 18 சதவீதமும், ஏசி இல்லை என்றால் 12 சதவீதம் வரி விதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 7,500க்கும் அதிகமான கட்டணம் வசூல் செய்யும் ஹோட்டல்களில் இருக்கும் உணவகங்கள் மற்றும் அவுட்டோர் கேட்டரிங் செய்யும் நிறுவனங்களில் 18 சதவீதம் வரி தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இவர்களுக்கு இன்புட் டாக்ஸ் கிரெடிட் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

50 பொருட்கள் மட்டுமே

இனி ஜிஎஸ்டி வரி அமைப்பின் 28 சதவீத வரியின் கீழ் 4 பிரிவைச் சேர்ந்த பொருட்கள் மட்டுமே இருக்கும்.

1. ஆடம்பர பொருட்கள்
2 கேடு விளைவிக்கக் கூடிய பொருட்கள்
3. ஆட்டோமொபைல் மற்றும் அதன் உதிரிப் பாகங்கள்
4. வொயிட் கூட்ஸ் ( பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்றவை)

 

28% வரியில் இருந்து 18%த்திற்குக் குறைக்கப்பட்ட பொருட்கள்- பகுதி 1

டிட்டர்ஜென்ட், துவைக்கும் மற்றும் சுத்தப்படுத்தும் பொருட்கள்
ஷாப்பு, ஹேர் கிரீம், ஹேர் டிரையர்
வாசனைத் திரவியம், அழகு மற்றும் மேக்அ பொருட்கள்
கைகடிகாரம், தோல் ஆடைகள்

பகுதி 2

கிட்சன் பொருட்கள், ஸ்டவ், குக்கர்
ரேசர் மற்றும் ரேசர் பிளேடு
கோக்கோ வெண்ணை, கொழுப்புகள், எண்ணெய் பவுடர்
சாக்லேட், சுவீங்கம் அல்லது பபில்கம்
முக்கு கண்ணாடி (Goggles), பைனாகுலர், டெலிஸ்கோப்

பகுதி 3

எலக்ட்ரிங் போர்டு, பேன்ல், வையர்
பர்னீச்சர், மெத்தை, பீடிங்
சூட்கேஸ், மேக்அ பொருட்களை வைக்கும் பர்ஸ், பிரீப்கேஸ்
பிரின்டர்ஸ், கார்டிஜஸ்

பகுதி 4

பேன், மோட்டார் பம்பு, கம்பரசர், மின்சார விளக்கு, லையிட் பிட்டிங்
சுகாதாரக் கிடங்கு (sanitary ware), மார்பில், கிரைனெட், செராமிங் டைல்ஸ்
கதவகள், ஜன்னல், அலுமினியம் பிரேம்
கண்ணாடி, பாதுகாப்பு கண்ணாடி, கண்ணாடி பொருட்கள்,

பகுதி 5

உடற்பயிற்சி உபகரணங்கள், இசை கருவிகள் மற்றும் அதன் பாகங்கள்
செயற்கை பூக்கள், செயற்கை இலை தளைகள், செயற்கை பழங்கள்

28% இருந்து 12% - இரண்டு பொருட்கள்

வெட் கிரைன்டர், ராணுவத்தில் பயன்படுத்தும் டேங்கர் மற்றும் பாதுகாப்பு பைட்டர் வாகனங்கள்

18% இருந்து 12% - 13 பொருட்கள்

கன்டென்ஸ்டு மில்ஸ், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, பாஸ்தா, நீரிழிவு உணவுகள், பிரின்டிங் இன்க், மூங்கி மற்றும் பிரம்பு பர்னிசர்கள், மூக்குக்கண்ணாடி, தொப்பிகள், குழம்பு பேஸ்ட்

18% இருந்து 5% - 6 பொருட்கள்

கடலை மிட்டாய், ரேவிடி, காஜா, சன்டி பவுடர் மற்றும் fly Ash ஆகியலவை 18% வரியில் இருந்து 5% வரியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

5% இருந்து 0% - 6 பொருட்கள்

மாட்டு உணவு பொருட்கள், காய்ந்த அல்லது பதப்படுத்தப்பட்ட மீன், நாட்டு சர்க்கரை ஆகியவை வரியில்லா பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

பிற பொருட்கள்

விமானத்தில் பயன்படுத்தும் டையர், என்ஜின் மற்றும் இருக்கைகள் இதற்கு முன் 28/18 சதவீத வரியில் இருந்தது. புதிய மாற்றத்தின் கீழ் 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

வளையல்கள் 3 சதவீத வரியில் இருந்து 0% வரிக்குக் குறைக்கப்பட்டுள்ளது.

 

வரியில்லா பொருட்கள்

உயிர்காக்கும் மருந்துகள், முக்கிய விளையாட்டு வீரர்களால் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு முழுமையான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஜியோ

தோல்வியைச் சுதாரித்துக் கொண்ட ஜியோ.. புதிய ஆஃபரை வெளியிட்ட முகேஷ் அம்பானி..!

எப்போதும் மழைதான்

ஓரு வழக்கிற்கு இத்தனை லட்சமா..? இவர் காட்டில் எப்போதும் மழைதான்..!

பெட்ரோல், டீசல் விலை

சவுதி அறிவிப்பால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயரும் அபாயம்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Common man will benefit more on GST tax changes

Common man will benefit more on GST tax changes
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns