ஜூலை மாதம் முதல் இந்தியாவில் அமலாக்கம் ஜிஎஸ்டி என அழைக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரியின் காரணமாக வர்த்தகச் சந்தையில் விற்பனை அதிகளவில் குறைந்து, வேலைவாய்ப்புகள் முதல் பொருளாதார வளர்ச்சி வரை அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி வரித் திட்டத்தை முறையாக வடிவமைக்காத காரணத்தால் ஒவ்வொரு ஜிஎஸ்டி அமைப்பின் கூட்டத்திலும் பொருட்கள் மீதான வரி அல்லது ஜிஎஸ்டி வரி தாக்கல் அறிக்கையில் ஏதேனும் மாற்றத்தை அறிவித்து வருகிறது. இந்தத் தொடர் மாற்றத்தால் மக்கள், வியாபாரிகள், உற்பத்தியாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் மிகப்பெரிய குழப்பத்தில் மூழ்கியுள்ளனர்.
இந்நிலையில் மீண்டும் சில பொருட்களின் மீதான வரியை குறைக்க முடிவு எடுக்கப்பட்டு வருவதாகத் தகவல் கிடைத்துள்ளது.
175 பொருட்கள்
கடந்த ஜிஎஸ்டி அமைப்பின் கூட்டத்தில் 28 சதவீத வரிப் பட்டியலில் இருக்கும் 175 பொருட்கள் மீதான வரியை 18 சதவீதத்திலும், அதற்குக் குறைவான வரிப் பட்டியலில் ஜிஎஸ்டி அமைப்புச் சேர்த்தது.
இந்நிலையில் மீண்டும் சில முக்கியமான பொருட்களின் மீதான வரியை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
முக்கியமான பொருட்கள்
இன்றைய வாழ்க்கை முறையில் நடுத்தரத் தட்டின் மேல் இருக்கும் பெரும்பாலான குடும்பங்கள் அனைத்தும் வாஷிங் மிஷின் மற்றும் பிரிட்ஜ் ஆகியவற்றைப் பயன்படுத்தி வரும் நிலையில் ஜிஎஸ்டி வரி அமைப்புக் கொண்டு வரும் போது இதற்கு 28 சதவீத வரி விதிக்கப்பட்டது.
விற்பனை
நுகர்வோர் பொருட்களைப் போலவே அதிகளவில் பயன்படுத்தும் வாஷிங் மிஷின் மற்றும் பிரிட்ஜ் போன் நுகர்வோர் சாதனங்களின் விற்பனை ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்பட்ட பின் அதிகளவில் குறைந்துள்ளது.
இந்நிலையில் இப்பிரிவு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் செய்து வரும் தொடர் விற்பனை சரிவு குறித்த புகார்களின் காரணமாக இப்பிரிவில் இருக்கும் பொருட்களின் மீதான வரியை குறைக்க ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.
பெண்கள்
பொதுவாக வாஷிங் மிஷின், பிரிட்ஜ், டிஷ் வாஷர் ஆகிய பெண்களின் தினசரி வேலையை எளிமையாக்கும் ஒரு கருவி. இதனைக் கருத்தில் கொண்டும், நாட்டின் இதன் விற்பனை மற்றும் அதன் வர்த்தகச் சந்தையையும் கணக்கில் கொண்டு இதன் மீதான வரி குறைக்க ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக ஜிஎஸ்டி அமைப்பின் அதிகாரி தெரிவித்துள்ளார்.
வரிக் கணிப்புகள்
ஏற்கனவே பல நுகர்வோர் சாதனங்கள் 12 மற்றும் 18 சதவீத வரியில் உள்ளது. இந்நிலையில் தற்போது வாஷிங் மிஷின், பிரிட்ஜ், டிஷ் வாஷர் ஆகியவற்றை 28 சதவீத வரிப் பட்டியலில் இருந்து 18 அல்லது 12 சதவீத வரிப்பட்டியலில் சேர்க்கப்படும் எனத் தெரிகிறது.
ஜிஎஸ்டி மாற்றம்..
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications