புதன்கிழமை வர்த்தகத்தில் பெரிய அளவிலான வர்த்தக உயர்வு இல்லையென்றாலும் ஆட்டோமொபைல் மற்றும் ரியாலிட்டி நிறுவனங்கள் மீது அதிகளவிலான முதலீடு செய்யப்பட்டுக் குறைந்த அளவிலான உயர்வை சந்தித்தது மும்பை பங்குச்சந்தை.
150 புள்ளிகள்
இன்று காலை மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் துவங்கும் போது அதிகளவிலான முதலீட்டு உடன் சென்செக்ஸ் குறியீடு 150 புள்ளிகள் வரை உயர்ந்து காணப்பட்டது. ஆனால் முதலீட்டாளர்களின் தொடர் பங்கு விற்பனையின் காரணமாகச் சென்செக்ஸ் சரிவை சந்தித்தது.
சென்செக்ஸ்
இதன் மூலம் இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 83.20 புள்ளிகள் உயர்ந்து 33,561.55 புள்ளிகள் வரையிலான உயர்வைச் சந்தித்தது.
நிஃப்டி
அதேபோல் நிஃப்டி குறியீடு வர்த்தக முடிவில் 15.40 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து இன்றைய வர்த்தகத்தை முடிந்துகொண்டது. நிஃப்டி குறியீடு செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் 10,342.30 புள்ளிகளை அடைந்தது.
முக்கியமான நிறுவனங்கள்
இன்றைய வர்த்தகத்தில் அதானி போர்ட்ஸ், எச்டிஎப்சி, எஸ்பிஐ, ஏசியன் பெயின்ட்ஸ், மாருதி, டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான உயர்வைச் சந்தித்தது.


Click it and Unblock the Notifications