இந்தியாவிலேயே ஐடி நிறுவனங்கள் மற்றும் ஐடி ஊழியர்கள் யூனியன் அமைப்பதற்காக முதல் முறையாக ஒப்புதல் அளித்தது தமிழ்நாடு தான்.
இந்நிலையில் புதிதாக உருவாகியுள்ள ஐடி ஊழியர்களுக்கான யூனியன், தற்போது தமிழக அரசால் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வமைப்பில் சேரும் ஐடி ஊழியர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் மிகப்பெரிய அளவில் அதிகரித்து வருகிறது
FITE அமைப்பு
ஐடி மற்றும் ஐடிஸ் ஊழியர்களுக்கான தமிழ்நாட்டில் உருவாகியுள்ள புதிய யூனியன் அமைப்பு தான் போரம் பார் ஐடி எம்பிளாயிஸ் என்ற FITE அமைப்பு.
தற்போது இந்த அமைப்பில் மாநிலத்தில் உள்ள ஐடி, பிபிஓ மற்றும் கேபிஓ ஆகிய நிறுவனங்களில் இருக்கும் ஊழியர்கள் இந்த அமைப்பில் ஆர்வமுடன் சேர்ந்து வருகின்றனர்.
வர்த்தக யூனியன் சட்டம்
FITE அமைப்பு வர்த்தக யூனியன் சட்டம் 1926 கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அமைப்பு ஐடி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களுக்கான அனைத்து உரிமைகளையும் முறையாகக் கோருவதற்காகவும், காரணமில்லாமல் செலவுகளைக் குறைப்பதற்காக நிறுவனம் ஒரு ஊழியர்களை வெளியேற்றுவதை எதிர்த்துக் கடுமையாகப் போராடவும் உருவாக்கப்பட்டுள்ளது.
தலைவர்
இந்திய ஐடித்துறையில் ஒரு ஊழியரின் திறனை ஆய்வு செய்வதிலும், மதிப்பிடு செய்வதிலும் ஒரு முறையான வடிவமைப்பை உருவாக்க வேண்டும். இதன் வாயிலாகவே ஊழியர்கள் தனித்தனியாகச் சந்திக்கும் பிரச்சனைகளில் இருந்து விடுபட முடியும் என FITE அமைப்பின் தலைவர் பரிமலா பஞ்சாச்சரம் தெரிவித்துள்ளார்.
நிறுவனங்களின் முறை..
இந்தியாவில் இருக்கும் ஐடி நிறுவனங்கள் ஒவ்வொன்றும் பல்வேறு விதமாக ஊழியர்களின் திறனை ஆய்வு செய்கிறது. இதனை ஊழியர்கள் அமைப்பு கண்டுக்கொள்ளவதும் இல்லை. இதனால் நிறுவனங்கள் அவர்களின் விருப்பத்தின் பெயரில் ஊழியர்களை வெளியேற்றுவதும், குறைந்த அளவிலான ஊதிய உயர்வு அளிப்பது எனப் பலவேறு சிக்கல்களை இத்துறை ஊழியர்கள் சந்தித்து வருகின்றனர்.
நிலையான ஆய்வு முறை
ஐடி மற்றும் ஐடிஸ் நிறுவனங்களில் ஊழியர்கள் சந்திக்கும் அடிப்படை பிரச்சனைகளைக் களைய முதல் நாடு முழுவதும் நிலையான மற்றும் ஏதுவான திறன் ஆய்வு முறையை வடிவமைத்து, அதனை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று பரிமலா பஞ்சாச்சரம் கூறியுள்ளார்.
2014 முதல்..
நாட்டின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமாகத் திகழும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம், 2014ஆம் ஆண்டில் நாடு முழுவதும் உள்ளது தனது ஊழியர்களைப் பெரிய அளவில் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டு அதற்கான பணியில் சில நூறு ஊழியர்களை வெளியேற்றிய போது இதனை எதிர்த்துச் சென்னையில் FITE அமைப்பு 29, டிசம்பர் 2014ல் துவங்கப்பட்டது.
முதல் பிரச்சாரம்
தற்போது FITE அமைப்பில் ஐடி துறை ஊழியர்கள் தொடர்ந்து சந்தித்து வரும் நிலையில், முதற்கட்டமாக ஊழியர்கள் சந்திக்கும் பிரச்சனைகளையும், அவர்களின் தேவைகளையும் நிர்வாகங்கள் மற்றும் அரசுகளுக்குக் கொண்டு சேர்க்கும் வகையில் பிரச்சாரம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.
ஆர் சந்திரசேகரன்
வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் ஐடி போன்ற துறைகளில் யூனியன் அமைப்புகளுக்கான தாக்கமும், தேவையும் குறைந்துள்ளது. மேலும் இன்று இந்திய ஐடி துறை நாட்டையும் தாண்டி உலகளாவிய சந்தையாக உருவெடுத்துள்ளது.
கர்நாடகா
தமிழ்நாட்டைத் தொடர்ந்து இந்தியாவின் டெக் ஹப் ஆக விளங்கும் பெங்களூரிலும் ஐடி ஊழியர்களுக்கான யூனியன் துவங்கப்பட்டுள்ளது.
பிற நகரங்கள்
தமிழ்நாட்டைத் தொடர்ந்து கர்நாடகா வெற்றிகரமாக யூனியன் அமைப்புகளைத் துவங்கியுள்ள நிலையில், தற்போது கொல்கத்தா, ஹைதராபாத், மும்பை மற்றும் டெல்லி ஆகிய நகரங்களும் இதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
சிக்கல்
இப்படி நாடு முழுவதும் ஐடி யூனியன்கள் வங்கி யூனியன்களைப் போல் வலிமை அடைந்தால் ஐடி நிறுவனங்களுக்கு ஊழியர்களை வெளியேறுவதில் இருந்து ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் சிக்கல்கள் நிலவும்.
More From GoodReturns

இன்போசிஸ் தலையெழுத்தை மாற்றப்போகும் புது CEO.. சலில் பாரிக் நிலைமை என்ன..?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications