ஜிஎஸ்டி வரி அமலாக்கத்தின் மூலம் இந்தியாவில் வகைப்படுத்தாத துறையில் இருக்கும் நிறுவனங்கள் அனைத்தும் கணக்கிற்குக் கொண்டு வரப்படும்.
இதன் மூலம் மத்திய அரசுக்கு அதிகளவிலான வரி வருவாய் கிடைக்கும் என நம்பப்பட்ட நிலையில் கடந்த 3 மாதங்களை விடவும் குறைவான ஜிஎஸ்டி வரி வருமானத்தை அக்டோபர் மாதத்தில் பெற்றுள்ள மத்திய அரசு.
வரி வசூல்
ஜூலை 1ஆம் தேதி அமலாக்கம் செய்யப்பட்ட ஜிஎஸ்டி வரி அமைப்பின் மூலம் கடந்த 3 மாதங்களாக 90,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வரி வசூலைப் பெற்று வந்த மத்திய அரசு, அக்டோபர் மாதத்தில் இதன் அளவீடு 83,346 கோடி ரூபாய் மட்டுமே பெற்றுள்ளது.
வரி செலுத்துவோர்
இதுவரை ஜிஎஸ்டி வரி அமைப்பின் கீழ் 95.9 லட்சம் வரி செலுத்துவோர் இணைந்துள்ளனர். இதில் 15.1 லட்சம் பேர் காம்போசிட் டீலர் அவர்கள் அனைவரும் ஒவ்வொரு காலாண்டிலும் வரி அறிக்கையைச் சமர்ப்பிக்கும் நபர்கள்.
நவம்பர் 26 வரையில் 50.1 லட்சம் பேர் அக்டோபர் மாதத்திற்கான வரி அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வரி திரும்பக் கோருதல்..
அக்டோபர் மாதத்தில் ஏற்றுமதியாளர்கள் மற்றும் வர்த்தகம் செய்வோர் செலுத்தி வரி திரும்பக் கோரப்பட்ட காரணத்தால் இம்மாதத்திற்கான வரி குறைவான அளவீட்டை பதிவு செய்துள்ளது
நவம்பர் மாதம்
ஜிஎஸ்டி அமலாக்கத்தின் மூலம் வர்த்தகச் சந்தை அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜிஎஸ்டி கவுன்சில் பல்வேறு பொருட்களின் மீதான வரியை குறைத்துள்ளதன் மூலம் நவம்பர் மாதம் அக்டோபர் மாதத்தை விடவும் குறைவான அளவிற்கு வரி வசூல் செய்யப்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
மொத்த வரி வசூல்
ஜூலை முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் மத்திய அரசுக்கு ஜிஎஸ்டி மூலம் 84,934 கோடி ரூபாயும், மாநில அரசுகளுக்கு 1,57,442 கோடி ரூபாய் அளவிற்கு வரி வருமானம் கிடைத்துள்ளது.
எண்ணிக்கை தொடர் சரிவு
ஜூலை முதல் அக்டோபர் காலகட்டத்தில் ஜிஎஸ்டி வரி செலுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.
ஜூலையில் 58.7 லட்சம் பேர், ஆகஸ்ட் மாதத்தில் 58.9 லட்சம் பேர், செப்டம்பரில் 57.3 லட்சம் பேர், அக்டோபர் மாதத்தில் (நவம்பர் 26 வரையில்) 50.1 லட்சம் பேர் மட்டுமே வரி தாக்கல் செய்துள்ளனர்.
வரி வசூல் அளவீடுகள்
ஜூலை மாதத்தில் 92,283 கோடி ரூபாய்
ஆகஸ்ட் மாதத்தில் 90,669 கோடி ரூபாய்
செப்டம்பர் மாதத்தில் 92,150 கோடி ரூபாய்
அக்டோபர் மாதத்தில் 83,346 கோடி ரூபாய்
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications