தங்க நகை மீதான ஆர்வம் மக்களுக்குச் சரிந்து வருகிறதா என்று எழ ஆரம்பித்துள்ளது. திருமணச் சீசன் காலத்தில் எப்போது தங்க நகை வாங்குவது என்பது அதிகமாக இருக்கும், ஆனால் இந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவிற்கு 50 சதவீத சரிவை சந்தித்துள்ளது.
சென்ற ஆண்டு 175 கோடியாக இருந்து வந்த தினசரி வர்த்தகம் இந்த அண்டு 88 கோடியாகச் சரிந்துள்ளது.
காரணங்கள்
பொருளாதார மந்தம், அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, குறைந்த பணப் பரிவர்த்தனைகள், வருமான வரித் துறை விசாரணை போன்றவையால் தான் இந்த விற்பனை சரிவு நிகழ்ந்துள்ளதாக வர்த்தகர்கள் கூறுகின்றனர்.
பண மதிப்பு நீக்க நடவடிக்கை
பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு மக்கள் தங்களிடம் இருந்த பணத்தினை வங்கி கணக்கில் டெபாசிட் செய்துவிட்டனர். மீண்டும் 2,000 ரூபாய் நோட்டின் மதிப்பு நீக்கப்பட்டுவிடும் என்பது போன்ற வதந்திகளால் மக்கள் ரூபாய் நோட்டுகளைக் கைகளில் வைத்துக்கொள்ள விரும்பாமல் வங்கி கணக்கிலேயே வைத்துள்ளனர்.
செக்
பொது மக்கள் செக் பரிவர்த்தனை செய்யவும் விரும்புவதில்லை, மரு பக்கம் வருமான வரித் துறை கெடுபிடிகள் உள்ளது போன்ற காரணங்களால் மக்கள் தங்க நகை வாங்காமல் உள்ளனர் என்று மும்பையினைச் சேர்ந்த நகை கடைக்காரரை கூறுகிறார்.
பான் எண்
ரூபாய் 2 லட்சத்திற்கும் அதிகமாகத் தங்க நகை வாங்கும் பான் போன்ற ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்ற காரணம் மட்டும் இல்லாமல் பலர் பழைய நகையினைப் புதுப்பித்தலை மட்டுமே தற்போது அதிகளவில் செய்து வருகின்றனர்.
விலக்கு
மத்திய அரசு 50,000 ரூபாய்க்கு அதிகமாகத் தங்க நகை வாங்கும் போது அடையாள ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்பதைத் திரும்பப்பெற்றும் மக்கள் மனதில் இன்னும் ஐயம் தீரவில்லை.
சரிந்த விற்பனை
தங்க நகை சாதாரணமாக ஒரு நாளைக்கு 175 கோடி வரை விற்பனை ஆகும் என்றும் இதுவே தீபாவளி, தசரா மற்றும் திருமணக் காலங்களில் 350 கோடி ரூபாய் வரை விற்பனை ஆகும் என்றும் நகை விற்பனையாளர்கள் சங்கங்கள் கூறுகின்றன.
தவனை முறை
தற்போது பல தரப்பட்ட மக்கள் வீட்டிற்குத் தேவையான பொருட்களைத் தவனை முறையில் வாங்கி விடுவதால் தங்க நகை போன்ற ஆடம்பர பொருட்கள் மீது கவனம் செலுத்துவது குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications