ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு அனைவருக்கும் பலவிதமான சந்தேகங்கள் எழுந்துள்ளன. அதில் முக்கியமான ஒன்று வீடு வாடகைக்கு எடுத்து இருக்கும் போது அதற்கு நாம் செலுத்தும் வாடகைக்கு ஜிஎஸ்டி செலுத்த வேண்டுமா? இல்லை வேண்டாம் என்பது ஆகும்?
ஜிஎஸ்டி
ஜிஎஸ்டி சட்டத்தின் படி வீடு போன்றவற்றை வாடகைக்கு அளிக்கும்போது சேவை துறையின் கீழ் வரும். ஆனால் வீட்டில் குடியிருப்பு நோக்கங்களுக்காக வாடகைக்கு விடப்பட்டு இருந்தால் ஜிஎஸ்டி கிடையாது.
வணிகம்
இதுவே வீட்டை வணிகம் செய்வதற்காக வாடகைக்கு விட்டு இருந்தால் வீட்டு உரிமையாளரின் ஆண்டு வருமானம் 20 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் போது 18 சதவீதம் வரி செலுத்த வேண்டும்.
தரகர்கள் கட்டணம்
அது மட்டும் இல்லாமல் நீங்கள் வீடு பார்க்க தரகர்களைப் பயனப்டுத்தி இருந்தால் அவர்களது வருமானமும் 20 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும்பட்சத்தில் தரகர் கட்டணத்திற்கும் 18 சதவீதம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கியக் குறிப்பு
இதே போன்று ஜிஎஸ்டி, பங்கு சந்தை, மியூச்சுவல் ஃபண்டு, சேமிப்புத் திட்டங்கள், இன்சூரன்ஸ் குறித்து உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் [email protected] என்ற மின்னஞ்சலுக்கு உங்களது கேள்விகளை அனுப்புங்கள்.


Click it and Unblock the Notifications