இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் ஆம்பாணிக்குத் திருமணம் என்ற செய்தி சமுக வலைத்தளத்தில் டிரென்ட் ஆனது.
கடந்த 2 நாட்களில் ஜம்மு முதல் கன்னியாகுமரி வரையில் இந்தச் செய்தி தீயாய் பரவியது. ஆனால் இது பொய்.
ஆகாஷ் ஆம்பானி
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர், ஆசியாவின் டாப் 5 இடத்தில் இருக்கும் ஒரேயொரு இந்தியர் எனப் பல பெருமைக்குச் சொந்தக்காரர் ஆன முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானிக்குத் திருமணம் என்று, இத்திருமணத்தின் அழைப்பிதழ் என்றும் சில வீடியோ வெளியானது
1.5 லட்சம் ரூபாய்
திருமண அழைப்பிதழின் விலையே 1.5 லட்சம் மற்றும் அழைப்புதலின் முழு வீடியோ என்ற பெயரில் வீடியோ வெளியானதால், மக்கள் அனைவரும் இதனை நம்பியது மட்டும் அல்லாமல் தொடர்ந்து ஷேர் செய்து வந்தனர்.
இதனால் நாடு முழுவதும் தீயாய் பரவியது.
ஐபோன் எக்ஸ்
ஒரு திருமண அழைப்பிதழ் 1.5 லட்சம் ரூபாய் என்று கூறப்பட்ட நிலையில், இதற்கு ஒரு ஐபோன் எக்ஸ் வாங்கலாம் என்றும், இன்னும் சில பிட்காயினில் முதலீடு செய்யலாம் என்றும் கூறிவந்தனர்.
மக்கள்
பொதுவாக அம்பானிகள் எதையும் சாதாரணமாகச் செய்ய மாட்டார்கள் என்பதை உணர்ந்த மக்கள் இந்தப் பத்திரிக்கையைப் பார்த்தும் நம்பிவிட்டனர்.
பொய்
இந்நிலையில் முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கூறுகையில் சமுக வலைத்தளங்களில் வெளியான ஆகாஷ் அம்பானியின் திருமணம் மற்றும் திருமணப் பத்திரிக்கையின் செய்திகள் பொய், யாரோ இதனைப் பிரபலம் அடைவதற்காகச் சித்தரித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது.
வீடியோ
இதுதான் அந்த வீடியோ
முக்கியப் பொறுப்பு
தற்போது ஆகாஷ் அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் நிர்வாகக் குழுவின் உறுப்பினராகவும், ரிலையன்ஸ் ஜியோ வர்த்தகத்தின் தலைவராகவும் உள்ளார்.
திருமணப் பெண்
முகேஷ் அம்பானியின் மகனான ஆகாஷ் அம்பானிக்குத் திருமணம் என்றால் பத்திரிக்கையை விடவும் அவர் திருமணம் செய்துகொள்ளப்போகும் பெண் தான் முக்கியப்படுத்தப்படுமே, தவிரத் திருமணப் பத்திரிக்கை அல்ல.
இவருக்கான சரியான ஜோடி யாரென்று நீங்கள் நினைக்கிறீர்கள்..?


Click it and Unblock the Notifications