இந்திய வங்கிகளில் குவிந்துகிடக்கும் வராக்கடனுக்கு முக்கியக் காரணம் காங்கிரஸ் தலைமையிலான முன்னாள் ஆட்சி தான் என்றும், இதுவே இக்கட்சியின் மிகப்பெரிய ஊழல் என்றும் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
வங்கிகள்
மேலும் வங்கிகளை வற்புறுத்திக் குறிப்பிட்ட கார்பரேட் நிறுவனங்களுக்கு மட்டும் கடன் கொடுத்துள்ளனர் எனவும் மோடி கூறினார். காமன்வெல்த், 2ஜி, கோல் ஆகியவை காங்கிரஸ் செய்த மிகப்பெரிய ஊழல்களில் சில என FICCI அமைப்பின் வருடாந்திர கூட்டத்தில் பேசினார்.
ரூ.7 லட்சம் கோடி
இந்திய வங்கிகள் தற்போது 7 லட்சம் கோடி ரூபாய் வராக்கடனில் உள்ளது, இதுவே தற்போது வங்கிகளுக்குப் பெரிய அளவிலான நஷ்டத்தையும் அளித்தும், வர்த்தகத்தைச் செவ்வெனச் செய்ய முடியாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
87 சீர்திருத்தங்கள்
இந்த வராக் கடன் களையே கடந்த 3 வருடத்தில் 21 துறைகளில் 87 சீர்திருத்தங்கள் செய்யப்பட்டது. இதனால் உலக வங்கியின் எளிமையாக வர்த்தகம் செய்யக்கூடிய நாடுகள் பட்டியலில் 142இடத்தில் 100வது இடத்திற்கு வந்தோம் என மோடி கூறினார்.
வங்கி அமைப்பு
தற்போது மத்திய அரசு வங்கி அமைப்புகளை உறுதியாக்கும் வகையில் பல முக்கியப் பணிகளைச் செய்து வருகிறது. ஆனால் மக்கள் மத்தியில் இதனைத் திருத்தி கூறி பொய்யான பரப்புரை செய்யப்பட்டு வருகிறது.
FRDI மசோதா
FRDI மசோதா குறித்துப் பேசிய மோடி, திவாலாகும் வங்கிகளில் இருக்கும் மக்களின் வைப்புகளைக் காக்கும் வண்ணம் முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications