குஜராத் மாநில தேர்தலின் வாக்கு எண்ணிக்கை துவங்கியுள்ள நிலையில், பிஜேபிக்கு இணையாகக் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. இதன் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தையில் இன்று காலை வர்த்தகத்தில் சென்செக்ஸ் 660 புள்ளிகள் வரையில் சரிவை சந்தித்தது.
அதேபோல் நிஃப்டி குறியீடும் 208 புள்ளிகள் வரையில் சரிந்து காணப்பட்டது.
சரிவில் இருந்து மீண்டது
இந்நிலையில் 9.30 மணி வரையில் உள்நாட்டு முதலீட்டாளர்களின் முதலீடு தொடர்ந்து அதிகரித்ததன் மூலம் சரிவின் அளவு 100 புள்ளிகளாக உயர்ந்தது.
200 புள்ளிகள் உயர்வு
10மணியளவில் சென்செக்ஸ் குறியீடு 60 புள்ளிகள் வரையில் உயர்ந்து 33,543 புள்ளிகளை அடைந்து, இன்றைய வர்த்தகத்தில் லாபகரமான நிலைக்கு சென்றது.
அதேபோல் நிஃப்டி குறியீடு 19.70 புள்ளிகள் வரையில் உயர்ந்து 10,352.95 புள்ளிகளை அடைந்தது.
10.10 மணியளவில் 200 புள்ளிகள் வரையில் உயர்ந்தது.
முன்னிலை அளவுகள்
வாக்கு எண்ணிக்கை வேகமாக நடந்து வரும் நிலையில் குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களிலும் தற்போது மத்தியில் ஆளும் பிஜேபி வெற்றிப்பெறும் என்பது ஒரு அளவிற்கு உறுதியாகியுள்ளது. இன்று காலை 9.53 மணியளவில் குஜாரத்தில் பிஜேபி 103 இடத்திலும், காங்கிரஸ் 75 இடத்திலும் முன்னிலை வகிக்கிறது. அதேபோல் ஹிமாச்சல பிரதேசத்தில் குஜாரத்தில் பிஜேபி 40 இடத்திலும், காங்கிரஸ் 23 இடத்திலும் முன்னிலை வகிக்கிறது.
முதலீடுகள்
இதன் காரணமாக மும்பை பங்குச்சந்தையில் முதலீட்டு அளவுகள் தொடர்ந்து அதிகரிப்பது மட்டும் அல்லாமல் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு சரிவில் இருந்து மீண்டு வருகிறது.
முக்கிய நிறுவனங்கள்
இதன் மூலம் சந்தையில் முக்கியமான நிறுவனங்களாகத் திகழும் பவர் கிரிட், டிசிஎஸ், இன்போசிஸ், பஜாஜ் ஆட்டோ, ஹீரோ மோட்டோ கார்ப் ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான சரிவை சந்தித்துள்ளது.
ரூபாய் மதிப்பு
நாணய சந்தையில் இன்று அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தற்போது 64.25 ரூபாயாக உள்ளது.


Click it and Unblock the Notifications