எச்டிஎப்சி ரியாலிட்டி நிறுவனங்களை 350 கோடி ரூபாய்க்கு வாங்கும் குவிக்கர்!

அடைமானக் கடன் வழங்கும் நிறுவனமான எச்டிஎப்சி தங்களது துணை நிறுவனங்களான எச்டிஎப்சி டெவலப்பர்ஸ் மற்றும் எச்டிஎப்சி ரியாலிட்டி நிறுவனங்களை 350 கோடி ரூபாய்க்கு குவிக்கர் நிறுவனத்திற்கு விற்க முடிவு செய்துள்ளது.

எச்டிஎப்சி டெவலப்பர்ஸ் மற்றும் எச்டிஎப்சி ரியாலிட்டி நிறுவனங்கள் இரண்டும் ரியல் எஸ்டேட் துறை சார்ந்த நிறுவனங்கள் ஆகும்.

எச்டிஎப்சி ரியாலிட்டி

எச்டிஎப்சி ரியாலிட்டி

எச்டிஎப்சி ரியாலிட்டி நிறுவனமானது வீடு வாங்குபவர்களுக்கான தரகு வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தினை 254.98 கோடி அளித்துக் குவிக்கர் வாங்க இருக்கிறது. எச்டிஎப்சி ரியாலிட்டியின் கீழ் 300 ஊழியர்கள் அலுவலகத்தில் இருந்தும் 7,000 தரகர்கள் வெவ்வேறு நகரங்களில் இருந்து பணிபுரிந்து வருகின்றனர்.

 எச்டிஎப்சி டெவலப்பர்ஸ்

எச்டிஎப்சி டெவலப்பர்ஸ்

எச்டிஎப்சி டெவலப்பர்ஸ் நிறுவனமானது எச்டிஎப்சி ரெட் இணையதளம் மூலமாக ரியல் எஸ்டேட் விளம்பரங்கள் சேவையினை வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தினை 101.99 கோடி ரூபாய் அளித்துக் குவிக்கர் வாங்குகிறது. மாதத்திற்கு 80,000 தனிப்பட்ட பார்வையாளர்களுடன் இந்தத் தளம் இயங்கி வருகிறது.

 எச்டிஎப்சி

எச்டிஎப்சி

எச்டிஎப்சி நிறுவனம் தங்களது ரியாலிட்டி வணிகத்தினை மொத்தமாகக் குவிக்கர் நிறுவனத்திற்கு அளித்துவிட்டு அதில் இருந்து குறிப்பிட்ட சதவீத அளவிலான பங்குகளை மட்டும் வங்க முடிவு செய்துள்ளது என்று தெரிவித்துள்ளது.

வருவாய்

வருவாய்

எச்டிபெசி டெவலப்பர்ஸ் நிறுவனம் 2016-2017 நிதி ஆண்டில் 0.01 சதவீதம் அதாவது 6.23 கோடி ரூபாய் வருவாயினை அளித்துள்ளது. இதுவே எச்டிஎப்சி ரியாலிட்டி நிறுவனம் 0.06 சதவீதம் என 35.25 கோடி ரூபாய் வருவாயினை அளித்துள்ளது.

குவிக்கர் ஹோம்ஸ்

குவிக்கர் ஹோம்ஸ்

குவிக்கர் ஹோம்ஸ் ரியாலிட்டி இணையதளம் ஒவ்வொரு மாதமும் 3.5 மில்லியன் தனிப்பட்ட பார்வையாளர்களைப் பெற்று வந்துள்ள நிலையில் எச்டிஎப்சி நிறுவனத்தினை வாங்கியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+