மும்பை பங்குச்சந்தையில் 2017ஆம் ஆண்டு மொத்தம் 153 நிறுவனங்கள் புதிதாகக் களமிறங்கி சுமார் 11.6 பில்லியன் டாலர் அளவிலான நிதியைத் திரட்டியுள்ளது. கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் இந்த வருடம் அதிகமான நிறுவனங்கள் ஐபிஓவில் ஈடுபட்டுள்ளது.
2017ஆம் ஆண்டின் 4வது காலாண்டில் கூட 22 நிறுவனங்கள் பங்குச்சந்தையில் குதித்துள்ளது, நடப்பு நிதியாண்டில் இதன் எண்ணிக்கை 47 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடத்தை விடவும் சுமார் 74 சதவீதம் அதிகளவிலான நிறுவனங்கள் பங்குச்சந்தையில் குதித்துள்ளது.

மேலும் ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், இந்தியா, ஆப்பிரிக்கா நாடுகள் மத்தியில் மும்பை பங்குச்சந்தை 4வது காலாண்டில் 5.5 பில்லியன் டாலர் அளவிலான 17 ஐபிஓ மூலம் தனித்து உயர்ந்து நிற்கிறது.
இதில் அதிகப்படியான நிதியைத் திரட்டி கொடுத்தது ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப் ஆஃப் இந்தியா நிறுவனம் 1.7 பில்லியன் டாலர் வரையிலான தொகையைத் திரட்டியுள்ளது.


Click it and Unblock the Notifications