நாட்டின் மறைமுக வரியை முழுமையாக மாற்றிய சரக்கு மற்றும் சேவை வரி ஜூலை 1 முதல் அமலாக்கம் செய்யப்பட்ட முதல் ஒவ்வொரு மாதமும் மத்திய அரசின் ஜஎஸ்டி வரி வருமானம் அதிகளவில் குறைந்து வருகிறது.
அதுவும் நவம்பர் மாதம் சராசரி அளவுகளை விடவும் அதிகமான அளவில் சரிவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்பட்ட போது, இனி வர்த்தகச் சந்தையில் யாரும் வரி ஏய்ப்புச் செய்ய முடியாது, இதன் அமலாக்கத்திற்குப் பின்பு மத்திய அரசுக்கு வரி வருமானம் அதிகளவில் உயரும் என அரசு தரப்புகள் நம்பிக்கை கொடுத்த நிலையில் தற்போது தொடர் சரிவை சந்தித்து வருகிறது.
ஜிஎஸ்டி வரி வருவாய்
ஆக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் குறைந்துள்ள நிலையில் நவம்பர் மாதம் அதன் அளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நம்பர் மாதத்தில் பல்வேறு காரணங்களுக்காக ஜிஎஸ்டி வரி வருவாய் 80,808 கோடி ரூபாய் அளவில் சரிவை சந்தித்து வரி வருவாயில் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது.
என்ன காரணம்..?
இக்காலகட்டத்தில் ஜிஎஸ்டி அமைப்பின் 23வது கூட்டம் குவஹாத்தியில் நடைபெற்றது, இதில் 200க்கும் அதிகமான பொருட்களின் மீதான வரியைக் குறைந்தது. இதுமட்டும் அல்லாமல் ஹோட்டல்களில் விதிக்கப்படும் வரியையும் தளர்த்தப்பட்டது. இந்த வரித் தளர்வு நவம்பர் 15ஆம் தேதி அமலாக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக ஜிஎஸ்டி வருவாய் அளவுகள் அதிகளவில் குறைந்துள்ளது.
வரி வசூல் அளவுகள்
ஜூலை மாதம் - 94,063 கோடி ரூபாய்
ஆகஸ்ட் மாதம் - 90,669 கோடி ரூபாய்
செப்டம்பர் மாதம் - 92,150 கோடி ரூபாய்
அக்டோபர் மாதம் - 83,364 கோடி ரூபாய்
நவம்பர் மாதம் - 80,808 கோடி ரூபாய்
வரி பங்கீடு
நவம்பர் மாதத்தில் வசூல் செய்யப்பட்ட 80,808 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரியில், மத்திய ஜிஎஸ்டியின் கீழ் 13,089 கோடி ரூபாய், மாநில ஜிஎஸ்டியின் கீழ் 18,650 கோடி ரூபாய், இணைக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியின் கீழ் 41,270 கோடி ரூபாய், செஸ் வாயிலாக 7,798 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது.
பரிமாற்றம்
இணைக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியை மத்திய மாநில அரசுகளுக்குப் பரிமாற்றம் செய்யப்பட்ட பின்பு மத்திய ஜிஎஸ்டி வரி வசூல் 23,437 கோடி ரூபாயாகவும், மாநில ஜிஎஸ்டி வரி வசூல் 33,138 கோடி ரூபாயாக உள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications