பிரிக்ஸ் கூட்டமைப்பில் அதிகளவில் வரா கடன் வைத்துள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 5வது இடத்தினைப் பிடித்துள்ளதாக அன்மை தகவல் கூறுகிறது.
பிரிக்ஸ் பட்டியலில் இந்தியாவிற்கு முன்பு க்ரீஸ், இத்தாலி, போர்ச்சுகல் மற்றும் ஐயர்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன. இந்த நாடுகள் அனைத்தும் மிகப் பெரிய கடன் பிரச்சனைகளில் சிக்கிய நாடுகள் ஆகும்.
PIIGS நாடுகளில் ஸ்பெயின் ஒன்று தான் இந்தியாவை விடக் குறைவான வரா கடனாக 5.28 சதவீதத்தினை வைத்துள்ளது. இந்தியாவோ 400 புள்ளிகளுடன் 9.85 சதவீத வரா கடனை வைத்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி
2015-ம் ஆண்டுச் சொத்துரிமை அங்கிகாரம் பற்றி இந்திய ரிசர்வ் வங்கி பேசும் வரை வரா கடன் சொத்து மதிப்பு அதிகரித்துக்கொண்டே தான் வந்துள்ளது.
மார்ச் 2018-ம் ஆண்டுக்குள் வரா கடன் பிரச்சனையினை முழுவதுமாகக் குறைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், அதன் பிறகு வரா கடன் அதிகரித்தால் வங்கிகள் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
மூன்று வகை
மிகக் குறைந்த அளவு, குறைந்த அலவு, நடத்தரம், மிக மோசமான நிலை என வரா கடன் வைத்துள்ள நாடுகள் பட்டியலை 4 வகையாக அறிக்கையில் பிரித்துள்ளனர்.
மிகக் குறைந்த அளவு
ஆஸ்திரேலியா, கனடா, ஹாங்காங், கொரியா குடியரசு மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் 1 சதவீதத்திற்கும் குறைவாக வரா கடன் வைத்துள்ளதாக முதல் வகையில் உள்ளனர்.
குறைந்த அளவு
இரண்டாம் வகையான குறைந்த அளவு வரா கடன் வைத்துள்ள நாடுகள் பட்டியலில் சீனா, ஜெர்மனி, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகியவை 2 சதவீதத்திற்கும் குறைவாகக் கடன் வைத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நடுத்தரம்
மூன்றாம் வகையான நடுத்தரம் பட்டியலில் சில ஐரோப்பிய நாடுகள் மற்றும் பிரேசில், இந்தோனேசியா, தாய்லாந்து, தென் ஆப்ரிக்கா மற்றும் துருக்கி ஆகியவை இடம்பெற்றுள்ளன.


Click it and Unblock the Notifications