இந்த வருடம் இதெல்லாம் கண்டிப்பா நடக்குமாம்..!

புத்தாண்டு பிறந்துவிட்டது புதிய புதிய தீர்மானங்களோடு புது ஆண்டை ஆடியெடுத்து வைத்துள்ளோம். இந்தச் சூழலில் 2017ஆம் ஆண்டில் நடந்த முக்கிய நிகழ்வுகளைப் புரட்டி பார்ப்பதை விடவும் 2018ஆம் ஆண்டில் என்ன நடக்கும்..? என்னென்ன மாற்றங்கள் சந்திக்கப்போகிறோம் என்பதில் சுவாரஸ்யம் அதிகம்.

2018ஆம் ஆண்டில் அப்படி என்ன நடக்கப்போகிறது. வாங்கப் பார்ப்போம்..

ஜிடிபி

ஜிடிபி

2017ஆம் ஆண்டுப் பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி அமலாக்கத்தால் பொருளாதார வளர்ச்சி பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. ஜிஎஸ்டி அமலாக்கத்தால் வகைப்படுத்தாத பரிவில் வேலைவாய்ப்புகள் அதிகளவில் குறைந்தது மட்டும் அல்லாமல் வர்த்தகமும் பாதிக்கப்பட்டது.

2018ஆம் ஆண்டின் இவ்விரண்டின் பாதிப்புகள் குறைந்து பொருளாதாரச் சீரான வேகத்தில் வளர்ச்சி அடையும் என அதிகளவிலான நம்பிக்கை 2017ஆம் ஆண்டின் கடைசிக் காலகட்டத்தில் தெரிந்தது.

 

மறைமுக வரி

மறைமுக வரி

2017ஆம் ஆண்டின் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வரி அளவுகள் அதிகளவில் குறைந்துள்ளது, இதனால் மத்திய அரசு வருடாந்திர நிதி நெருக்கடி அதிகரித்துக் காணப்படுகிறது. இதன் மூலம் 2018ஆம் ஆண்டில் அமைச்சர்களுக்கான செலவுகள் குறைக்கப்படும் எனத் தெரிகிறது.

மேலும் ஜிஎஸ்டி வாயிலாகக் கிடைக்கும் மறைமுக வரி அளவுகள் 2018ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்குள் சீரடையும் எனத் தெளிவாகத் தெரிகிறது.

 

உத்தரவு..

உத்தரவு..

ஜிஎஸ்டி கீழ் வரும் மறைமுக வரி 2017ஆம் ஆண்டில் குறைந்துள்ள நிலையில், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடம் இருந்து பெறப்படும் நேரடி வரியை வசூலை அதிகப்படுத்த வரி அதிகாரிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் மறைமுக வரி மற்றும் நேடரி வரி வசூல் சராசரியாக 8.5 முதல் 9 லட்சம் ரூபாய் வரையில் இருக்கும், 2017ஆம் ஆண்டில் மறைமுக வரியில் (ஜிஎஸ்டி) ஏற்பட்டுள்ள சரிவை நேரடி வரி மூலம் ஈடுசெய்யத் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

 

உற்பத்தி துறை

உற்பத்தி துறை

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட பின்பு உற்பத்தித் துறை பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இதனுடன் ஜிஎஸ்டி அமலாக்கத்தால் மொத்த உற்பத்தி சந்தையும் தரைதட்டியது என்றே சொல்ல வேண்டும்.

ஆனால் கடந்த 6 மாதத்தில் உற்பத்தியில் இருக்கும் சில முன்னணி நிறுவனங்கள் மீண்டு வந்து வளர்ச்சியை நோக்கிச் சென்றாலும், பல நிறுவனங்கள் இன்னமும் சரிவிலேயே உள்ளது. குறிப்பாக வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை அதிகரிக்கவே இல்லை.

இந்த இக்கட்டான சூழ்நிலை அனைத்தும் 2018ஆம் ஆண்டில் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஆபத்தான நிலை..

ஆபத்தான நிலை..

2017ஆம் ஆண்டில் மும்பை பங்குச்சந்தை அதிகளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது. பங்குகளின் விலையும் கண்மூடித்தனமாக உயர்ந்து காணப்படும் நிலையில், அதிகப்படியான மதிப்பீடு செய்யப்பட்டுள்ள தெளிவாகத் தெரிகிறது என இத்துறை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

இத்தகைய சூழ்நிலையில் 2018ஆம் விஸ்வரூபம் எடுத்துப் பெரிதாக வெடிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

 

ஏற்றுமதி

ஏற்றுமதி

2017ஆம் ஆண்டில் பல்வேறு காரணங்களுக்காக ஏற்றுமதி அளவுகள் அதிகளவில் பாதிப்பை சந்தித்தது. ஆனால் இவ்வாண்டின் கடைசியில் ஏற்றுமதியில் கணிசமான உயர்வு காணப்பட்டது.

இந்நிலையில் அதிக ஊழியர்களை நம்பி இயங்கும் ஏற்றுமதி வர்த்தகத்தை ஊக்குவிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது இதனால் ஜிஎஸ்டி தாக்கம் தணிந்த பின்பு இத்துறை வர்த்தகம் அதிகரிக்கும் எனத் தெரிகிறது.

 

கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய்

2017ஆம் ஆண்டில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்த நிலையில் மத்திய அரசிடம் அதிகளவிலான நிதி இருப்பு இருந்தது, ஆனால் தற்போது கச்சா எண்ணெய் தனது பழைய ஆஸ்தான விலையான 60 டாலருக்கும் அதிகமான அளவை அடைந்துள்ளது.

இதன் மூலம் 2018ஆம் ஆண்டில் அரசின் கச்சா எண்ணெய் செலவுகள் அதிகரித்துப் பணவீக்கம் அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

 

ஊரக வளர்ச்சி

ஊரக வளர்ச்சி

மத்திய அரசு தற்போது ஊரக வளர்ச்சி மற்றும் விவசாயத்தை வளர்ச்சி திட்டங்களைக் கையில் எடுத்துள்ள நிலையில், 2018ஆம் ஆண்டி பொருளாதார வளர்ச்சிக்கு அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.

உள்கட்டமைப்பு

உள்கட்டமைப்பு

கடந்த 3 வருடமாக மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களை அறிவித்து இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், 2018ஆம் ஆண்டில் இவை நடைமுறைப்படுத்தப்படும் என உறுதியாகத் தெரிகிறது.

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

இந்தியாவில் தற்போது வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை அதிகளவில் குறைந்து காணப்படும் நிலையில், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க பல்வேறு திட்டங்களை அறிவிக்கத் தயாராகி வருகிறது.

தனியார் முதலீடுகள்

தனியார் முதலீடுகள்

கிரீன்பீல்டு திட்டங்களில் தனியார் பிரிவின் முதலீடுகள் அதிகளவில் குறைந்து உள்ளது. இதனைப் பெரிய அளவில் ஈர்க்க மத்திய அரசு பல முயற்சிகளைச் செய்து வருகிறது.

2018ஆம் ஆண்டில் இது கண்டிப்பாகப் பலன் அளிக்கும் எனவும் தெரிகிறது.

 

பொருளாதார வளர்ச்சி

பொருளாதார வளர்ச்சி

மத்திய அரசின் எடுக்கும் பல்வேறு முயற்சிகள் சரியான பலன் அளிக்கும் நிலையில் இந்திய பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதத்தைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+