2018இல் நீங்கள் எடுக்க வேண்டிய முக்கியமான தீர்மானங்கள்..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

புத்தாண்டுக்கு நாம் எடுக்கும் தீர்மானங்கள் 3 மாதம் தொடர்ந்து கடைப்பிடித்தாலே ரொம்பப் பெரிய விஷயம், இதனால் பலர் தீர்மானங்களை எடுப்பதே இல்லை என்பது நிதர்சனமான உண்மை.

தற்போது கூறப்படும் தீர்மானங்களை நீங்கள் சீரியஸாக எடுத்தால், உங்கள் வாழ்க்கை மாறுகிறதோ இல்லையோ உங்கள் நிதி நிலை நிச்சயம் வலிமை அடையும். நாம் வாழ்நாள் முழுவதும் ஓடிஓடி பணம் சம்பாதிப்பது எதற்காக, வலிமையான நிதிநிலையை அடையத்தானே.

2018இல் நீங்கள் எடுக்க வேண்டிய முக்கியமான தீர்மானங்கள் இதோ..

ஆடம்பரமாக வாழ்வதைக் கைவிடுங்கள்..

உங்களுக்கு உண்மையிலேயே பணக்காரரான ஆக வேண்டும் என்ற ஆசையோ, வெறியோ இருந்தால், முதலில் அதிகம் செலவு செய்யும் பழக்கத்தைக் கைவிடுங்கள். குறிப்பாகப் பிறருக்கு முன் நாம் ஆடம்பரமாகக் காட்டிக்கொள்ள வேண்டும், இல்லையெனில் மதிப்பு இருக்காது என்ற எண்ணம் உங்களிடம் இருந்தால் முதலில் அதை மாற்றிக்கொள்ளுங்கள்.

பில் கேட்ஸ், டாடா, பிர்லா போன்றவர்கள் பணத்தை அதிகளவில் சேர்த்த பின்பு ஆடம்பரத்தை நோக்கிச் சென்றனர். ஆனால் நாம் அதைத் தலைகீழாகச் செய்கிறோம்.

எனவே நிதர்சனத்தை உணர்ந்து செயல்படுங்கள்.

 

முதலீடு செய்யத் துவங்கவும்..

மில்லியனர்கள் கிளப்-இல் 2018 நீங்கள் சேர வேண்டும் என்றால் முதலில் செலவு செய்வதைக் குறைத்துவிட்டு அதிகளவிலான பணத்தை முதலீடு செய்ய வேண்டும். முதலீடு என்றால் நேரடி முதலீட்டுத் திட்டங்களில் குறித்து உங்களுக்குப் பயம் இருந்தால், சேமிப்புத் திட்டங்களில் கூடப் பணத்தைப் போடலாம். இதுவும் ஒரு வகையில் முதலீடு தான்

தேவையில்லா பொருட்களை வாங்க வேண்டாம்..

தள்ளுபடி, ஆஃபர் போன்ற வார்த்தைகள் எப்போதும் இனிமையாகத் தான் இருக்கும், ஷாப்பிங் செய்ய நம்மைத் தூண்டும். இது எல்லோருக்கும் இயல்பான ஒன்றுதான், ஆனால் 2018 முதல் இதனைச் சற்று மாற்றிக்கொள்ளுங்கள்.

சிறப்பு விற்பனையில் நீங்கள் பொருட்களைப் பார்க்கும்போது உண்மையாக இது உங்களுக்கு அவசியமா, இந்தப் பொருள் இல்லையெனில் இயல்பு வாழ்க்கை பாதிக்குமா என்ற கோணத்தில் நீங்கள் யோசித்தாலே போதும். சிறந்த முடிவையே நீங்கள் எடுப்பீர்கள்.

 

முட்டாள்தனமான ஆஃபர்கள்

பொதுவாகக் கடைகளில் 2 சட்டை வாங்கினால் 50 சதவீதம் தள்ளுபடி என அறிவித்திருப்பார்கள், ஆனால் நீங்கள் கடைக்குச் சென்று ஒரு சட்டையை மட்டுமே வாங்கச் சென்று இருப்பீர்கள். தள்ளுபடியைப் பார்த்த உடன் கூடுதலான பணத்தைச் செலவு செய்து 2 சட்டை வாங்கிய அனுபவம் பலருக்கும் இருந்திருக்கும்.

இது சட்டைக்கு மட்டுமல்ல, காஸ்மெடிக்ஸ், ஷூ என அனைத்திற்கும் பொருந்தும். அணைத்திருக்கும் மேலாகத் தற்போது பெரு நகரங்களில் வாழும் இளைஞர்கள் அதிகளவில் ஆன்லைன் ஷாப்பிங், தள்ளுபடி, சிறப்பு விற்பனையில் விழுகின்றனர். இதைச் சற்று குறைத்துக்கொண்டாலே மாதம் பல ஆயிரம் சேமிக்க முடியும்.

 

கார் மற்றும் பைக்..

பலருக்கும் கார், பைக்குகளைக் குறைந்த காலத்திலேயே மாற்றும் பழக்கம் இருக்கும். இதற்கு அவர்கள் கூறும் காரணம் சாமானியர்களுக்கு ஏற்க முடியாத ஒன்றாக இருந்தாலும், இத்தகையவர்களை முழுமையாக மாறுவது சற்றுக் கடினம்.

இத்தகைய சூழ்நிலையில் தொடர்ந்து கார், பைக் வாங்குபவர்கள் உங்களைப் போலவே பல கார், பைக்குக்களை விற்பனை செய்வது உண்டு. அவர்களிடம் இருந்து பயன்படுத்திய வாகனங்களை வாங்கினால் உங்களின் பணம் மிச்சப்படுத்த முடியும்.

 

கேஜெட்கள்

இன்றைய இளைஞர்களுக்குக் கேஜெட்கள் மீது தீராகக் காதல். போன், லேப்டாப், தற்போது வீஆர், ப்ளேஸ்டேஷன் எனப் பல்வேறு கேஜெட்களை வாங்குகின்றனர். அது பிரச்சனை இல்லை (கடன் அல்லது கிரெடிட் கார்டு கொண்டு வாங்கினால் பிரச்சனை தான்) இதனைத் தயாரிக்கும் நிறுவனங்கள் ஒவ்வொரு வருடமும் அப்டெட் செய்யப்பட்ட கேஜெட்களை அறிமுகம் செய்து வரும் நிலையில், அதையும் வாங்கும்போது தான் பிரச்சனை பெரிதாக வெடிக்கிறது.

இத்தகை பழக்கம் உள்ளவர்கள் உடனடியாக மாற்றிக்கொள்ளுங்கள், இந்தப் பழக்கத்தின் வாயிலாக ஒவ்வொரு வருடமும் நீங்கள் அதிகப்படியான பணத்தை இழந்து வருகிறீர்கள்

 

செலவு செய்யும் பணம்..

இன்று நீங்கள் செலவு செய்யும் பணம் நாளை உங்களுக்கு லாபமாக மாறும் வகையில் பணத்தைச் செலவு செய்யுங்கள். புதிய படிப்புகளைப் படிக்கவோ, முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்தோ, உங்கள் பணி வாழ்க்கையை அடுத்தத் தளத்திற்குக் கொண்டும் செல்லும் சில முக்கியப் பயிற்சி திட்டத்திலோ செலவு செய்யலாம்.

கடன் அல்லது கிரெடிட் கார்டு

சில முதலீட்டின் மூலம் லாபம் கிடைத்தால், அதனைப் புதிய பொருட்களை வாங்குவதைக் கைவிட்டு உங்கள் வருமானத்தையும், உழைப்பையும் தின்னும் கடனுக்கான வட்டி, கிரெடிட் கார்டு இருப்புகளைக் குறைக்கப் பயன்படுத்தவும்.

இதனால் நீங்கள் ஒவ்வொரு மாதமும் பெரிய அளவில் செலவு செய்யும் தொகை குறைவது மட்டும் அல்லாமல் கடன் தொல்லை இல்லாத வாழ்க்கையை வாழ முடியும். இதுவே 2018இல் நீங்கள் கட்டாயம் எடுக்கவேண்டிய தீர்மானம்.

 

பழைய பொருட்களை விற்பனை

வீட்டில் நீங்கள் வாங்கிக் குவித்திருக்கும் பொருட்களை முழுமையாகப் பயன்படுத்த முடியவில்லை என்ற நிலையில் அதனை முதலில் விற்று விடுங்கள், குறிப்பாகப் பலரின் வீட்டில் தற்போது கியர் சைக்கிள் பயன்படுத்தப்படாமல் இருக்கும். அதேபோல் காஸ்ட்லியான பிராண்ட் ஆடைகளும் இருக்கும். இதனை நீங்கள் பயன்படுத்திப் பல வருடங்கள் கூட ஆகியிருக்கும்.

இத்தகைய பொருட்களை விற்பனை செய்யச் சந்தையில் பல வர்த்தகத் தளங்கள் உள்ளது. இதில் நீங்கள் எல்லாப் பொருட்களையும் விற்கலாம்.

 

தீர்மானங்கள்

மேலே கொடுக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் பின்பற்றினால் அடுத்தச் சில மாதங்களிலேயே நீங்கள் சிறப்பான நிதி வலிமையை அடைவீர்கள். இது எப்படிப்பட்ட அனுபவமாக இருக்கும் என்று சுருக்கமாகக் கூறினால், தற்போது உங்கள் கையில் 1 கோடி ரூபாய் இருந்தால் மனதில் ஏற்படும் உறுதி மற்றும் நம்மதியை தான் இந்த நிதி வலிமை.

மேலும் இந்தப் பணத்தை நீங்களே உருவாக்கி இருப்பதால் கூடுதல் வலிமை உங்கள் மனதைத் தாண்டி உடலிலும் இருக்கும். ட்ரை செய்து பாருங்களேன்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Important New Year Resolutions to make you healthy and happy in 2018

Important New Year Resolutions to make you healthy and happy in 2018- Tamil Goodreturns | 2018இல் நீங்கள் எடுக்க வேண்டிய முக்கியமான தீர்மானங்கள்..! - தமிழ் குட்ரிட்டன்ஸ்
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns