தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

இந்தியாவில் தங்கம் விலை குறித்து மீண்டும் பெரிய விவாதம் கிளம்பியுள்ளது. பொருளாதார ஆய்வாளர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் வெளியிட்ட வீடியோவில், தங்கம் விலை அடுத்த ஐந்து ஆண்டுகளில் எட்டக்கூடிய நிலைகள் குறித்து அவர் பகிர்ந்துள்ள கணிப்புகள் முதலீட்டாளர்களையும், பொதுமக்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

குறிப்பாக சர்வதேச சந்தை மாற்றங்கள், ரூபாய் மதிப்பு சரிவு, மற்றும் உலகளாவிய முதலீட்டு நிறுவனங்களின் கணிப்புகளை அடிப்படையாக கொண்டு ஆனந்த் ஸ்ரீனிவாசன் தங்கம் விலை 1 கிராம் ரூ.40000 வரை செல்லும் என கருத்தை முன்வைத்துள்ளார்.

தங்கம் விலை பெரிய மாற்றம் வரபோகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்..!!

ஹோலி பண்டிகை
தற்போதைய சந்தை நிலவரத்தைப் பார்க்கும்போது, ஹோலி பண்டிகை காரணமாக உள்ளூர் சந்தை விடுமுறையாக உள்ளது. மேலும் தங்கம் மார்கெட்டில் ஏற்கனவே பணப்புழக்கம் குறைந்திருந்ததால் தங்கம் விலையில் பெரிய மாற்றம் இல்லாமல் இருந்தது. இன்று கிராமுக்கு ரூ.10 வரையில் மட்டுமே விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

ஆனால் இது தற்காலிக நிலைமையே என ஆனந்த் ஸ்ரீனிவாசன் கூறுகிறார். ரூபாய் மதிப்பு 92.30 என்ற பலவீன நிலையில் இருப்பதால், அமெரிக்க சந்தையில் தங்கம் வீழ்ச்சியடையவில்லை என்றால் இந்தியாவில் மீண்டும் ஏற்றம் தொடங்க வாய்ப்பு உள்ளது எனவும் ஆனந்த் ஸ்ரீனிவாசன் தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சந்தையில் அடுத்த அதிர்ச்சி
இன்றைய சர்வதேச சந்தை நிலவரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க வர்த்தக நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் விலை 3.52% குறைந்து 5,136.11 டாலராக சரிந்தது. அதேபோல் வெள்ளி விலை 8.40% வீழ்ச்சி கண்டு 81.8 டாலர் அருகே வர்த்தகமாகிறது. இந்த சரிவு இந்திய சந்தையில் நாளை பிரதிபலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது நீண்டகால முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பா அல்லது அபாயமா என்பது முக்கிய கேள்வியாகிறது.

ரூபாய் பலவீனம்
தங்கம் விலை உயர்வுக்கு இரண்டாவது முக்கிய காரணமாக ரூபாயின் பலவீனம் குறிப்பிடப்படுகிறார் ஆனந்த் ஸ்ரீனிவாசன். இந்தியாவில் தங்கம் உற்பத்தி செய்யப்படாத காரணத்தால் தங்கம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு தான் இந்தியாவில் விற்கப்படுகிறது. இதன் காரணமாக தங்கம் விலை நிர்ணயம் செய்வதில் டாலர் மதிப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. ரூபாய் மதிப்பு சரியும்போதெல்லாம் தங்கம் விலை உயரும்.

ஜெப்ரீஸ் கணிப்பு
அமெரிக்க முதலீட்டு நிறுவனமான ஜெப்ரீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது இருக்கும் உலகளாவிய பொருளாதார குழப்பங்கள், ஏஐ பபுள், போர் அச்சம், ஏஐ தாக்கம், நாணய மதிப்பில் சரிவு, டாலருக்கு மாற்று நாணயத்தை தேடும் போக்கு நீடித்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் தங்கம் ஒரு அவுன்ஸ் 10,000 டாலர் வரை செல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

இகனால் தற்போது 5,200 டாலர் அளவில் இருக்கும் தங்கம் அடுத்த 5 வருடத்தில் இரட்டிப்பாகும் சாத்தியம் இருப்பதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இந்த அறிக்கையை அடிப்படையாக கொண்டு பேசிய ஆனந்த் ஸ்ரீனிவாசன் தங்கம் விலை ஒரு கிராம் 40000 ரூபாய் வரையில் உயரும் என கணித்துள்ளார்.

இந்தியாவில் விலை மாற்றம்
இப்போது ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 5,200 டாலராக இருக்கும் போது இந்தியாவில் 24 கேரட் தங்கம் 1 கிராம் சுமார் ரூ.17,000 அளவில் இருக்கிறது. இது இரட்டிப்பானால் அதாவது 10000 டாலர் ஆனால் இந்தியாவில் இதன் விலை ரூ.34,000 ஆகும். இதற்கு மேலாக, ரூபாய் மதிப்பு 90 இலிருந்து 120 ஆக அடித்த 5 வருடத்தில் சரிந்தால் தங்கம் விலையில் மேலும் 30% உயர்வு சேர்க்கப்படும்.

அதாவது ஒரு கிராம் தங்கம் ரூ.42,000 முதல் ரூ.43,000 வரை செல்லும் சாத்தியம் இருப்பதாக கணக்கிட்டு உள்ளார் ஆனந்த் ஸ்ரீனிவாசன். இந்த விலை மாற்றத்திலும், கணக்கீட்டிலும் பாதுகாப்பான அளவை எடுத்துக்கொண்டாலும் ஒரு கிராம் தங்கம் ரூ.40,000 அளவை எட்டும் வாய்ப்பு அதிகம் என ஜெப்ரீஸ் கணிப்பை வைத்து ஆனந்த் ஸ்ரீனிவாசன் கணக்கிட்டு உள்ளார்.

முதலீட்டாளர்களுக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்
இந்த கணிப்புகள் நிஜமாகும் பட்சத்தில், இப்போது தங்கம் வாங்கும் முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய லாபம் கிடைக்கும். தற்போது 17000 ரூபாய் விலையில் தங்கம் வாங்கினாலும் அடுத்த 5 வருடத்தில் ஒரு கிராமுக்கு ரூ.20,000 - 25,000 வரை லாபம் கிடைக்கலாம் என ஆனந்த் ஸ்ரீனிவாசன் கூறுகிறார்.

மேலும் 4,000 ரூபாய்க்கு தங்கம் வாங்கியவர்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் கிராமுக்கு ரூ.20,000க்கும் மேல் லாபம் காணலாம் எனவும் ஆனந்த் ஸ்ரீனிவாசன் தனது வீடியோவில் மதிப்பிட்டு உள்ளார். ஜெப்ரீஸ் கணிப்பின் படி அதிகபட்சமாக ரூ.35,000 வரை லாபம் கூட சாத்தியம் எனவும் ஆனந்த் ஸ்ரீனிவாசன் கூறியுள்ளார்.

ஒரு கிலோ தங்கம்
தற்போது 1000 கிராம் (ஒரு கிலோ) தங்கம் வைத்திருப்பவர்கள் ஐந்து ஆண்டுகளில் ரூ.35 லட்சம் வரை லாபம் காணலாம் என்ற கணக்கையும் ஆனந்த் ஸ்ரீனிவாசன் தனது வீடியோவில் வெளியிட்டு உள்ளார். ஆனால் இவை அனைத்தும் சந்தை நிலவரம், டாலர்-ரூபாய் மாற்று விகிதம், உலக அரசியல் சூழ்நிலை போன்ற பல காரணிகளின் மீது சார்ந்திருப்பதை கவனிக்க வேண்டும்.

தங்கம் குறித்த இந்த புதிய கணிப்புகள் முதலீட்டாளர்களுக்கு பெரிய விவாதத்திற்குரிய விஷயமாகவே உள்ளது. குறுகிய கால சரிவுகள் இருந்தாலும், நீண்டகாலத்தில் தங்கம் பாதுகாப்பான முதலீடாக தொடருமா? அல்லது உலக பொருளாதார மாற்றங்கள் புதிய சமநிலையை உருவாக்குமா? என்ற கேள்விகள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் தெளிவாகும். தற்போதைய நிலவரத்தில், தங்கம் மீண்டும் ஒருமுறை 'சேஃப் ஹேவன்' முதலீடாக கவனம் பெறுகிறது என்பது மட்டும் உறுதி.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+