200-க்கும் மேற்பட்ட மத்திய மற்றும் மாநில அரசு இணையதளங்களில் பொது மக்களின் ஆதார் விவரங்கள் பெயர் மற்றும் முகவரி போன்ற இரகசியமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக இந்திய தனிநபர் அடையாள ஆணையம் கூறியுள்ளது.
மேலும் இப்படி வெளியிடப்பட்ட இணையதளங்களின் விவரங்கள் கண்டறியப்பட்டு அவை நீக்கப்பட்டதாகவும் ஆர்டிஐ கேள்வியில் இந்திய தனிநபர் அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்திய தனிநபர் அடையாள ஆணையம்
இந்திய தனிநபர் அடையாள ஆணையம் எந்த ஒரு தனிநபர் விவரங்களையும் வெளியிடவில்லை. ஆனால் 210-க்கும் மேற்பட்ட மத்திய மாற்றும் மாநில அரசு இணையதளங்களில், கல்வி நிறுவனங்கள் தனிநபரின் பெயர், முகவரி, பிற விவரங்கள் மற்றும் ஆதார் எண்ணை அனைவரும் வெளிப்படையாகப் பார்க்கும் படி வெளியிட்டுள்ளது என்று மட்டும் தெரிய வந்துள்ளது.
ஆர்டிஐ
இந்திய தனிநபர் அடையாள ஆணையத்திற்கு இந்த விவரங்கள் கிடைத்த உடன் சம்மந்தப்பட்ட இணையதளங்களில் இருந்து ஆதார் விவரங்கள் நீக்கப்பட்டதாகவும் ஆர்டிஐ கேள்விக்குப் பதில் வந்துள்ளது.
ஆதார் கார்டு
இந்திய தனிநபர் அடையாள ஆணையத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் ஆதார் கார்டு நாடு முழுவதும் மிக முக்கியமான அடையாள அட்டையாக மாறிவருகிறது. அதே நேரம் இந்தத் தகவல்கள் மிக ரகசியமாகக் காக்கப்பட வேண்டியதும் கட்டாயம் ஆகும்.
மத்திய மற்றும் மாநில அரசுகள்
மத்திய மற்றும் மாநில அரசுகள் ஆதார் கார்டினை பல்வேறு நல திட்டங்களுக்குக் கட்டாயம் எனக் கூறியுள்ளன. ஆதார் விவரங்கள் பலதரப்பட்ட பாதுகாப்பு வசதிகளுடன் இந்திய தனிநபர் அடையாள ஆணையத்தினால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
பாதுகாப்பு
தொடர்ந்து ஆதார் கார்டு விவரங்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்படுகிறதா என்றும் தனிக்கை செய்யப்படுவதாகவும், பாதுகாப்பு முறைகளும் அதிகரிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திடம் தெரிவித்தனர்.
ஏர்டெல்
அன்மையில் ஆதார் கார்டு மூலம் வழங்கப்பட்டு வரும் சமையல் எரிவாயு மானியத்தினை ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டு அந்த விவரங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தெரியப்படுத்தாமல் இருந்தது கண்டறியப்பட்டு அவர்களது வங்கி கணக்குள் மீண்டும் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பிட்காயின்
தம்பியை கடனில் இருந்து காப்பாற்றிய முகேஷ் அம்பானி..!
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications