நாட்டின் முன்னணி வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷ்னல் வங்கி 10 கோடி ரூபாய் வரையிலான குறுகிய கால வைப்பு நிதி மீதான வட்டியை அதிகரித்து மக்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது, இதன் மூலம் குறுகிய வைப்பு நிதி திட்டத்தைத் தேடுபவர் பிஎன்பி வங்கியால் அதிகளவில் ஈர்க்கப்படுவார்கள்.
வட்டி உயர்வு
பஞ்சாப் நேஷ்னல் வங்கி சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பின் படி, 10 கோடி ரூபாய் வரையிலான தொகைக்கான டேம் டெப்பாசிட் அதாவது குறுகிய கால வைப்பு நிதி திட்டத்தின் வட்டி விகிதத்தை 1.25 சதவீகம் வரையில் உயர்த்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
1 கோடி ரூபாய்
இதன் படி 1 கோடி ரூபாய்க்கும் குறைவான வைப்பு நிதிக்கான வட்டியை 1.25 சதவீதம் வரையில் உயர்த்தி 5.25 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, தற்போது இதன் அளவு 4 சதவீதமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதன் முதிர்வு காலம் 7 முதல் 29 நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
30-45 நாள் காலம்
அதேபோல் 30-45 நாள் முதிர்வு காலம் கொண்ட வைப்பு நிதியின் வட்டியை 4.50 சதவீதத்தில் இருந்து 5.25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
பிற வைப்பு நிதி திட்டங்கள்
46-90 நாட்கள் முதிர்வு காலம் கொண்ட திட்டத்திற்கு 6.25 சதவீதமாகவும்,91-179 நாட்கள் முதிர்வு காலம் கொண்ட திட்டத்திற்கு 6.25 சதவீதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1-10 கோடி ரூபாய் அளவிலான வைப்பு நிதிக்கு 4.8 சதவீதம் வட்டி விகிதத்தை உயர்த்தப்பட்டுள்ளது.
ஒரு வருட முதிர்வு காலம்
மேலும் ஒரு வருட முதிர்வு காலம் கொண்ட வைப்பு நிதிக்கு 5 சதவீதத்தில் இருந்து 5.7 சதவீதமாக வட்டி உயர்த்தப்பட்டுள்ளது.
1 -3 வருடம் வரையில் முதிர்வு காலம் கொண்ட திட்டத்திற்கு 5.5 சதவீதமாகவும், 3 -10 வருடம் வரையிலான முதிர்வு காலம் கொண்ட திட்டத்திற்கு 5.25 சதவீதமாக வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications