பிட்காயின் அல்லது அதைப் போன்ற நாணயங்களில் முதலீடு செய்வது என்பது சட்டத்திற்கு உட்பட்டதல்ல என்றும் மீறி வாங்குவது என்பது அவர்களது சொந்த ரிஸ்க் தான் என்று நேற்று பாராளுமன்றத்தின் பல்வேறு உறுப்பினர்கள் இது குறித்துக் கேட்டதால் கேள்வி நேரத்தில் பதில் அளித்துள்ளார்.
மாநிலங்களவையின் கேள்வி நேரத்தில் திமுகப் பாராளுமன்ற உறுப்பினரான கனிமொழி பிட்காயின் மற்றும் எத்திரியம் போன்ற கிரிப்டோ கரன்சிகளை ஒழுங்குமுறை படுத்தும் எண்ணம் ஏதேனும் மத்திய அரசுக்கு உள்ளதா? உலகளவில் இந்தியர்கள் 11 சதவீதம் கிரிடோகரன்சிகளில் முதலீடு செய்துள்ளனர் என்று கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதில் அளித்த அருண் ஜேட்லி பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்வது சட்டத்திற்கு உட்பட்டது கிடையாது.
மத்திய அரசு இது குறித்து ஆய்வு செய்து வருகிறது. பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் தலைமையிலான குழு ஒன்று இதில் உள்ள சிக்கல்கள் குறித்து விவாதித்து வருவதாகவும் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications