வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று ஆசிய சந்தையின் நிலையான வர்த்தகம் மற்றும் முதலீட்டின் காரணமாக மும்பை பங்குச்சந்தையில் அதிகளவிலான முதலீடு குவிந்தது, இதன் காரணமாக மும்பை பங்குச்சந்தை இன்று நிலையான வர்த்தகத்தை பெற்று வர்த்தக முடிவில் புதிய உச்சத்தை பதிவு செய்தது.
இன்று வர்த்தகம் துவங்கும் போதே 180 புள்ளிகளுக்கும் அதிகமான உயர்வில் வர்த்தகத்தை துவங்கிய நிலையில், தொடர்ந்து 180 புள்ளிகளுக்கும் அதிகமான வர்த்தக நிலையிலேயே சென்செக்ஸ் இருந்தது.

இதன் காரணமாக இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 230 புள்ளிகள் வரையில் உயர்ந்தது. இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 198.94 புள்ளிகள் உயர்ந்து புதிய உச்ச நிலையான 34,352.79 புள்ளிகளை அடைந்தது.
மேலும் நிஃப்டி குறியீடு 64.75 புள்ளிகள் உயர்ந்து 10,623.60 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிவிற்கு வந்தது.
திங்கட்கிழமை வர்த்தகத்தில் இன்போசிஸ், எச்டிஎப்சி, எல் அண்ட் டி, ஐடிசி, ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான வளர்ச்சியை அடைந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications