இந்திய வங்கித்துறையில் வராக்கடன் சொத்துக்கள் அளவு ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசும், வங்கி தரப்பும் அதன் அளவைக் குறைக்கவும், கூடுதல் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் முக்கியமானது ஐபிசி மசோதா.
இத்தகைய சூழ்நிலையில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் பாங்க் ஆப் பரோடா, மற்றும் யூன்யன் பாங்க் ஆப்ப் இந்தியா ஆகியவை வராக் கடன் பிரச்சனையில் இருந்து விடுபட இரு முக்கிய நிறுவனங்களின் சொத்துக்களைப் பொதுச் சந்தை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது.
2 நிறுவனங்கள்
புஷன் ஸ்டீல் மற்றும் எஸ்ஸார் ஸ்டீல் ஆகிய இரு நிறுவனங்களின் சுமார் 17,550 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களைப் பொதுச் சந்தை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது.
இதன் மூலம் தற்போது இந்தச் சொத்துக்களை யார் வேண்டுமானாலும் வாங்கலாம்.
திவால்
தற்போது இரு நிறுவனங்களும் நொடித்து மற்றும் திவால் பிரச்சனையில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. வங்கிகள் இந்நிறுவனங்களுக்குச் சொந்தமான சொத்துக்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ள நிலையில், திவாலாக அறிவிக்கும் பணிகள் மார்ச் 31 வரையில் கால அவகாசம் வங்கிகளுக்குக் கிடைத்துள்ளது.
கடன் அளவுகள்
புஷன் ஸ்டீல் மற்றும் எஸ்ஸார் ஸ்டீல் ஆகிய இரு நிறுவனங்களுக்குப் பாங்க் ஆப் பரோடா 13,566 கோடி ரூபாய் அளவிலான கடன் நிலுவையை வைத்துள்ள நிலையில் சுமார் 42 கணக்குகளில் இருந்து இரு நிறுவனங்களின் சொத்துக்களுக்கு விருப்பம் தெரிவித்துள்ளது.
அதேபோல் யூனியன் வங்கி சுமார் 3,985 கோடி ரூபாய் அளவிலான கடன் நிலுவையை வைத்துள்ளது, இதற்கு 18 கணக்குகளில் இருந்து விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணம் மட்டும்
இந்தச் சொத்துக்களை வாங்க விருப்பம் உள்ளவர்கள் பணமாக மட்டுமே கொடுக்க வேண்டும் எனப் பாங்க் ஆப் பரோடா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
ஆனால் யூனியன் வங்கி பணம் மற்றும் பாதுகாப்பு வைப்பு நிதியாகப் பெற தயாராக உள்ளது என அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications