ஜிஎஸ்டி அமைப்பின் 25வது கூட்டம் இன்று டெல்லியில் முடிந்தது, இக்கூட்டத்தில் E-Way பில், காம்போசிட் திட்டம் மற்றும் 3B ரிட்டன் ஆகியவை இன்னும் சில காலத்திற்குத் தொடரும் என்று ஜிஎஸ்டி அமைப்பின் தலைவர் மற்றும் மத்திய நிதியமைச்சருமான அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
மேலும் இன்றைய கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட வரி மாற்றங்கள் ஜனவரி 25ஆம் முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட முக்கியமான அறிவிப்புகள்

1. E-Way பில் குறித்த சோதனை ஜனவரி 25ஆம் தேதி வரையில் நீடிக்கும் என்றும், அதில் பதிவேற்றம் நடவடிக்கைகள் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் துவங்கும் எனத் தெரிகிறது.
2. 3பி ரிட்டன் தாக்கல் தொடரும், இதனால் விநியோகிஸ்தர்கள் பில்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
3. இன்டரா ஸ்டேட் E-Way பில்களுக்கு 15 மாநிலங்கள் ஒப்புதல் அளித்துள்ளது.
4. பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரி அமைப்பிற்குள் கொண்டு வருவது குறித்த முடிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
5. ரியல் எஸ்டேட் துறை குறித்து எவ்விதமான முடிவுகளும் எடுக்கப்படவில்லை, இதனால் இத்துறை குறித்த முடிவுகள் அடுத்தக் கூட்டத்திற்கு ஒத்திவைக்கப்படும்.
6. 29 கைவினை பொருட்கள் மீதான வரி 0 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
7. சில விவசாயப் பொருட்கள் மீதான வரியும் 25வது கூட்டத்தில் குறைக்கப்பட்டுள்ளது.

8. அதேபோல் எப்படி விற்பனையாளர் மற்றும் நுகர்வோர் பொருட்களை வாங்கியதற்கான பில்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பது குறித்தும் முக்கியமான ஆலோசனை செய்யப்பட்டது.
9. காம்போசிட் திட்டத்தின் கீழ் 307 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்யப்பட்டுள்ளது.
10. மேலும் 40 கைவினை பொருட்கள் மீதான வரியை பிட்மென்ட் கமிட்டி முடிவு செய்யும் என்றும் ஜிஎஸ்டி கவுன்சில் கூறியுள்ளது.
11. இணைக்கப்பட்ட ஜிஎஸ்டி (IGST) கீழ் வசூல் செய்யப்பட்ட 35,000 கோடி ரூபாய் அளவிலான வரியை மத்திய மற்றும் மாநில அரசுகள் மத்தியில் பங்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
12. இன்றைய கூட்டத்தில் 29 சரக்கு மற்றும் 53 சேவைகளுக்கு வரி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications