இந்தியாவில் ஏற்றுமதியின் அளவுகள் உயராத நிலையில், இறக்குமதி அளவு மட்டும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை மிகப்பெரிய அளவில் அதிகரித்துக் காணப்படுகிறது.
இந்நிலையின் வர்த்தகப் பற்றாக்குறையில் மிகப்பெரிய பங்கு வகிக்கும் தங்கம் மீதான இறக்குமதி வரியைக் குறைக்க இத்துறை வியாபாரிகள் மத்திய அரசுக்குக் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் நாட்டின் நிதிநிலை , வர்த்தக நிலை மற்றும் ரூபாய் மதிப்பு ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போது தங்கம் மீதான இறக்குமதி வரியைக் குறைக்கத் துளியும் வாய்ப்பு இல்லை எனத் தெரிகிறது.

இதுமட்டும் அல்லாமல் தற்போது கச்சா எண்ணெய் விலையும் உயர்ந்துள்ள நிலையில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியைக் குறைத்தால் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை வரலாறு காணாத உச்சத்தை அடையும்.
இதன் காரணமாகப் பட்ஜெட் தாக்கலுக்குப் பின் தங்கம் விலையில் பெரிய அளவிலான மாற்றம் இருக்காது எனவும் தற்போதைய நிலைப்பாட்டின் படி தெரிகிறது.


Click it and Unblock the Notifications