முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் டெலிகாம சேவையினை 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இலவசமாக அளித்து வந்தது. பின்னர் ஏப்ரல் மாதம் முதல் தான் கட்டண சேவை அளிக்கத் துவங்கியது.
எனவே செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டு வரை லாபம் பெறாத ஜியோ முதன் முறையாக மூன்றாம் காலாண்டில் லாபம் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மூன்றாம் காலாண்டு
அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான மூன்றாம் காலாண்டில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 504 கோடி ரூபாய் நிகர லாபம் அடைந்துள்ளதாக அறிவித்துள்ளது. இதுவே செப்டம்பர் மாதம் வரையிலான இரண்டாம் காலாண்டில் 271 கோடி ரூபாய் நட்டம் அடைந்து இருந்தது.
ஏர்டெல்
அதே நேரம் ரிலையன்ஸ் ஜியோவின் போட்டி நிறுவனமான ஏர்டெல் வியாழக்கிழமை வெளியிட்ட மூன்றாம் காலாண்டு முடிவுகளில் லாபம் சரிந்துள்ளதாக அறிவித்து இருந்தது.
ஏர்டெல் மூன்றாம் காலாண்டு அறிக்கை
சுனில் மிட்டல் தலைமையிலான ஏர்டெல் நிறுவனம் மூன்றாம் காலாண்டு முடிவில் சென்ற வருடத்துடன் ஒப்பிடும் போது 306 கோடி ரூபாய் என நிகர லாபமானது 39 சதவீதம் வரை சரிந்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் வருவாய்ச் சரிந்திருந்தாலும் ஏர்டெல் நிறுவனத்தின் ஆப்ரிக்கா வருவாய் அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
வருவாய்
இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடும் போது ஜியோவின் வருவாய் 12 சதவீதம் உயர்ந்து 6,879 கோடி ரூபாய் பெற்றுள்ளது. சரியாக ஒவ்வொரு பயனர்களிடம் இருந்து 154 ரூபாய் மாத வருவாய் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜியோ
ஜியோ சேவை வந்த பிறகு இந்தியாவின் தரவு பயன்பாடு என்பது உலகின் அதிகளவில் உயர்ந்து அமெரிக்கா மற்றும் சீனாவுடன் போட்டி போட்டு வருகிறது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications