இந்தியாவின் மிகப்பெரிய வீட்டுக்கடன் நிறுவனமாக இருக்கும் எச்டிஎப்சி 2017ஆம் நிதியாண்டில் 3வது காலாண்டில் சுமார் 3 மடங்கு அதிக லாபத்தைப் பெற்றுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.
3வது காலாண்டு
டிசம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டில் எச்டிஎப்சி நிறுவனம் யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 5,670.21 கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பெற்றுள்ளது.
கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் லாப அளவு 1,701.21 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதிகப்படியான லாபம்
இக்காலாண்டில் பெற்ற லாபம் அளவான 5,670.21 கோடி ரூபாய், தனது வரலாற்று அளவான 5,25031 கோடி ரூபாய் விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
என்ன காரணம்..?
எச்டிஎப்சி வங்கி இக்காலாண்டில் தனது காப்பீட்டுக் கிளை நிறுவனமான எச்டிஎப்சி ஸ்டாண்டர்டு லைப் இன்சூரன்ஸ் கிளையில் இருந்து சுமார் 3,675 கோடி ரூபாய் அளவிலான பங்குகளை விற்பனை செய்துள்ளது. இதன் வாயிலாகவே அதிகளவிலான லாபத்தை அடைந்துள்ளது.
வருவாய்
இக்காலாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் 8,667.15 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது, இது கடந்த நிதியாண்டில் 8,133.78 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வராக்கடன்
செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் வராக்கடன் அளவு 1.14 கோடி ரூபாயாக இருந்த நிலையில், டிசம்பர் காலாண்டில் 0.01 சதவீதம் அதிகரித்து 1.15 சதவீதமாக உயர்ந்துள்ளது.
வட்டி வருமானம்
இந்நிறுவனத்தின் வட்டி வருமானம் மட்டும் இக்காலாண்டில் 3,122 கோடி ரூபாய் அளவிற்குப் பெற்றுள்ளது, இது கடந்த நிதியாண்டில் 2,848 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பங்குச்சந்தை
இன்றைய வர்த்தகத்தில் எச்டிஎப்சி நிறுவனப் பங்குகள் சுமார் 3.28 சதவீதம் வரையில் உயர்ந்து 1965 ரூபாய் என்ற நிலையை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications