ஜிஎஸ்டிக்குப் பின் புதிதாக வரி செலுத்துவோர் எண்ணிக்கை உயர்வு..!
இந்திய வர்த்தகச் சந்தையை முழுமையாகப் புரட்டி போட்ட ஜிஎஸ்டி என அழைக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கம் செய்யப்பட்ட பின்பு வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த 2 வருடத்தில் இந்தியாவில் ஏற்பட்ட முக்கியமான மாற்றங்களில் பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரி அமலாக்கம் ஆகியவை முக்கியமானது.

இதன் அமலாக்கத்திற்குப் பின் புதிதாக வரி செலுத்துவோர் எண்ணிக்கை 18 லட்சம் வரையில் உயர்ந்துள்ளது. இது சராசரி அளவை விடவும் சற்று அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிஎஸ்டி கீழ் இருக்கும் வரி செலுத்துவோர் எண்ணிக்கை மட்டும் 2017-18ஆம் நிதியாண்டில் மட்டும் சராசரி அளவுகளை விடவும் 50 சதவீதம் அதிகமான வளர்ச்சியை அடைந்துள்ளது எனப் பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications