பிளிப்கார்ட் உடனான போட்டியில் 3 பில்லியன் டாலரை இழந்தது அமேசான்..!

2017-ம் ஆண்டுப் பிளிப்கார்ட் நிறுவனத்துடனான போட்டியில் மட்டும் 3 பில்லியன் அமெரிக்க டாலரினை அமேசான் இந்தியா நிறுவனம் இழந்துள்ளது தெரியவந்துள்ளது.

அமேசான் இந்தியா நிறுவனத்திற்கு 2016-ம் ஆண்டு 1.28 பில்லியன் டாலராக இருந்த நட்டமானது 2017-ம் ஆண்டு 3 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. அதே நேரம் டிசம்பர் மாத காலாண்டில் சென்ற வருட விற்பனையான 43.9 பில்லியன் டாலரில் இருந்து அதிகரித்து 54 பில்லியன் டாலரினை பெற்றுள்ளது.

பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

வெளிநாட்டு வணிகம்

வெளிநாட்டு வணிகம்

அமேசான் நிறுவனத்தின் வெளிநாட்டு வணிகங்களில் 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 481 மில்லியன் டாலர் நட்டம் அடைந்து இருந்ததாகவும், அதுவே 2017-ம் ஆண்டு இரட்டிப்பாகி 919 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

வளர்ச்சி

வளர்ச்சி

2017-ம் ஆண்டு இந்தியாவில் அதிகளவிலான பிரைம் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளதாக அமேசான் கூறியுள்ளது. அமேசான் பிரைம் பிரிவின் துணைத் தலைவரான கிரெ க்ரீலி அளித்த பேட்டியில் இந்தியாவில் பிரைம் உறுப்பினர் சேவையானது மிக வேகமான வளர்ந்து வருகின்றது என்று தெரிவித்தார்.

அமேசான் பிரைம்

அமேசான் பிரைம்

2016-ம் ஆண்டு ஜூளை மாதம் 499 ரூபாய்க்கு ஆஃபருடன் துவங்கப்பட்ட அமேசான் பிரைம் சேவை 2017-ம் ஆண்டு அசல் விலையான 999 ரூபாயினைக் கட்டணமாக வசூலித்து வருகிறது.

 முதலீடு

முதலீடு

சென்ற ஆண்டுப் பிளிப்கார்ட் நிறுவனம் ஜப்பானின் சாப்ட் பேங்க்கிடம் இருந்து 4 பில்லியன் டாலர் முதலீடு பெற்றதை அடுத்து அமேசான் நிறுவனம் இந்தியா பிரிவுக்காக 8,150 கோடி ரூபாயினை முதலீடு செய்தது.

நிகர விற்பனை

நிகர விற்பனை

2016-ம் ஆண்டின் 4வது காலாண்டுடன் ஒப்பிடும் போது 2017-ம் ஆண்டின் 4 வது காலாண்டில் 38 சதவீத நிகர விற்பனையினை அதிகரித்து 60.5 பில்லியன் டாலரினை அமேசான் பெற்றுள்ளது.

நிகர வருவாய்

நிகர வருவாய்

அமேசானின் நிகர வருவாய் 2016-ம் ஆண்டு இருந்த 2.4 பில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து 2017-ம் ஆண்டு 3.0 பில்லியன் டாலராகப் பெற்றுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+