மும்பை பங்குச்சந்தையில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டு வரும் தொடர் சரிவின் உச்சக்கட்டமாக இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு அதிகப்படியாக 1300 புள்ளிகளை இழந்துள்ளது.
இந்த அதிரடி சரிவில், சராசரி பங்கு முதலீட்டாளர்கள் மட்டும் அல்லாமல் முன்னணி முதலீட்டாளர்களான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, ஆஷிஷ் கசோலியா மற்றும் டோலி கண்ணா ஆகியோரும் அதிகளவிலான பணத்தை இழந்துள்ளனர்.
பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
மும்பை பங்குச்சந்தை
இன்றைய வர்த்தகத் துவக்கத்திலேயே மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 1,000 புள்ளிகள் வரையிலான சரிவை சந்தித்து, அதிகப்படியாக 1,350 புள்ளிகள் வரையிலான சரிவை பதிவு செய்தது.
இதேபோல் நிஃப்டி குறியீடு அதிகப்படியாக 400 புள்ளிகள் வரையில் சரிவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
32 சதவீத வீழ்ச்சி
இன்றைய வர்த்தகத்தில் மட்டும் முன்னணி பங்கு முதலீட்டாளர்கள் சராசரியாகச் சுமார் 32 சதவீத பணத்தை இழந்துள்ளனர்.
பங்கு முதலீட்டாளர்களின் நிலை
இன்றைய சரிவிற்குப் பின் பலவீனமான முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குச்சந்தையை விட்டு வெளியேறும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது, அதேபோல் நீண்ட கால முதலீட்டாளர்கள் சரிவை தாண்டியும் பங்கு இருப்புகளை வைத்திருப்பார்கள் எனத் தெரிகிறது.
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா
2018ஆம் ஆண்டில் மட்டும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா-வின் பங்கு மதிப்பு 32 சதவீதம் வரையிலான சரிவை சந்தித்துள்ளது.
ஆப்டெக் 34% சரிவு, ப்ரோஜோன் 27% சரிவு, ஜியோஜிட் பைனான்சியல் சர்வீசஸ் 27% சரிவு, எம்சிஎக்ஸ 27.12% சரிவைச் சந்தித்துள்ளது.
அதேபோல் ஆட்டோ லைன் இண்டஸ்ட்ரீஸ், பெடரல் வங்கி, ஓரியன்ட் சிமெண்ட் ஆகிய நிறுவனங்கள் 24 சதவீதம் வரையிலான சரிவை சந்தித்துள்ளது.
டோலி கண்ணா
இதேபோல் டோலி கண்ணா போர்ட்போலியோவில் இருக்கும் ஸ்டெர்லிங் டூல்ஸ் 19% சரிவு, துவாரிகேஷ் சுகர் 20% சரிவு, நந்தன் டெனிம் 21% சரிவு, எம்கே குளோபல் பைனான்சியல் சர்வீசஸ் 20% சரிவு, ரூசிரா பேப்பர் 19% சரிவு, மணப்புரம் பைனான்ஸ் 21% சரிவு, ஜிஎன்எப்சி 19% சரிவு, ரெயின் இண்டஸ்ட்ரீஸ் 18% சரிவு மற்றும் ஐஎப்பி அக்ரோ 25 சதவீதம் வரையிலான சரிவை சந்தித்துள்ளது.
ஆஷிஷ் கசோலியா
ராகேஷ் போலவே முன்னணி முதலீட்டாளர்களில் ஒருவரான ஆஷிஷ் கசோலியா திங்கட்கிழமை Shaily Engineering Plastics நிறுவனத்தில் வைத்திருந்த 2,95,000 பங்களை விற்றுவிட்டு வைபவ் குளோபல் நிறுவனப் பங்குகளை வாங்கினார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications