இன்றைய வர்த்தக துவக்கத்திலேயே 1000 புள்ளிகளுடன் சரிந்த சென்செக்ஸ் 1 மணிநேரத்தில் 1,300 புள்ளிகள் வரையிலான சரிவை சந்தித்து முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது.
பட்ஜெட் அறிக்கையில் விதிக்கப்பட்டுள்ள 10 சதவீத வரி ஏற்கனவே முதலீட்டாளர்களை வாட்டி வதைக்கும் நிலையில் இன்றைய சரிவு முதலீட்டாளர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்ல வேண்டும்.
பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
அமெரிக்கா
அமெரிக்காவின் வேலைவாய்ப்புத் தரவுகள் வட்டி உயர்வுக்கு மிகவும் சாதகமான சூழ்நிலையை உருவாக்கியுள்ள நிலையில் முதலீட்டாளர்கள் அதிகளவிலான பங்குகளை விற்றுவிட்டு வெளியேறி வருகின்றனர்.
வேலைவாய்ப்புகள்
அமெரிக்காவின் விவசாயம் அல்லாத வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை ஜனவரி மாதத்தில் மட்டும் 2,00,000 ஆக உயர்ந்துள்ளது, இது 1,80,000 ஆக இருக்கும் எனக் கணிக்கப்பட்ட நிலையில் 20,000 வேலைவாய்ப்புகள் கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த 8.5 வருடத்தில் ஜனவரி மாதத்திலேயே அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கப்பட்டுள்ளது.
பிரச்சனை
இதனால் தற்போது அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்து, பத்திர முதலீடுகளில் கிடைக்கும் லாபத்தின் அளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவே அமெரிக்கப் பங்குச்சந்தையின் சரிவிற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
டாவ் ஜோன்ஸ்
இதன் காரணமாக அமெரிக்காவின் டாவ் ஜோன்ஸ் குறியீடு திங்கட்கிழமை வர்த்தகத்தில் மட்டும் சுமார் 1,100 புள்ளிகள் வரையில் சரிந்தது. இது கடந்த 6.5 வருடத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவாகும்.
ஆசிய சந்தை
அமெரிக்கப் பங்குச்சந்தையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியின் காரணமாக ஆசிய சந்தையிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியா சந்தை 3.53 சதவீதம், சீன சந்தை 2.15 சதவீதம், ஹாங்காங் சந்தை 4.94 சதவீதம், ஜப்பான் சந்தை 6.80 சதவீதம், தைவான் 5.77 சதவீதம் வரையிலான சரிவை பதிவு செய்துள்ளது.
இதில் இந்திய சந்தையும் அடக்கம்..
மும்பை பங்குச்சந்தை
இன்றைய வர்த்தகத் துவக்கத்திலேயே மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 1,000 புள்ளிகள் வரையிலான சரிவை சந்தித்து, அதிகப்படியாக 1,350 புள்ளிகள் வரையிலான சரிவை பதிவு செய்தது.
இதேபோல் நிஃப்டி குறியீடு அதிகப்படியாக 400 புள்ளிகள் வரையில் சரிவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications