அமெரிக்கப் பங்குச்சந்தை வீழ்ச்சி, பட்ஜெட் அறிவிப்புகள் எனப் பல்வேறு காரணங்களாக மும்பை பங்குச்சந்தை மிகப்பெரிய சரிவை அடைந்துள்ளது. பங்குச்சந்தை சரிந்துள்ள நிலையில் இதனை வாய்ப்பாகப் பயன்படுத்தி முதலீட்டாளர்கள் அனைவரும் புதிய முதலீடுகளைச் செய்யத் துவங்கியுள்ளனர்.
இதனால் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் சரிவை சந்தித்த மும்பை பங்குச்சந்தை, இன்று கணிசமான உயர்வை அடைந்தது.
ஆனால் 11.00 மணிக்கு மேல் அதிகளவிலான முதலீட்டாளர்கள் 2 நாட்களில் சந்தித்த நஷ்டத்தை ஈடு செய்யும் வகையில் லாப நோக்கத்திற்காகப் பங்குகளை விற்பனை செய்யத் துவங்கிய காரணத்தால் சென்செக்ஸ் மீண்டும் சரிவை நோக்கிய சென்றது.
இந்நிலையில் அடுத்த ஒரு வருடத்திற்கு அதாவது நீண்ட கால முதலீட்டு முறையில் நீங்கள் முதலீடு செய்ய வேண்டிய முக்கியமான பங்குகளையே நாம் இப்போது பார்க்கப்போகிறோம். மேலும் இந்தப் பங்குகளில் சுமார் 40 சதவீதம் அளவிலான லாபத்தை அடைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
முதல் நிறுவனம்
நிறுவன பெயர்: ப்யூச்சர் கன்ஸ்யூமர்
இன்றைய விலை: 63.55 ரூபாய்
டார்கெட் விலை: 85 ரூபாய்
வளர்ச்சி வாய்ப்புகள்: 42 சதவீதம்
#2வது நிறுவனம்
நிறுவன பெயர்: ஹெச்டிஎப்சி லிமிடெட்
இன்றைய விலை: 1775.45 ரூபாய்
டார்கெட் விலை: 2,000 ரூபாய்
வளர்ச்சி வாய்ப்புகள்: 13 சதவீதம்
#3வது நிறுவனம்
நிறுவன பெயர்: ஈமாமி
இன்றைய விலை: 1,121.75 ரூபாய்
டார்கெட் விலை: 1,314 ரூபாய்
வளர்ச்சி வாய்ப்புகள்: 20 சதவீதம்
#4வது நிறுவனம்
நிறுவன பெயர்: டெக் மஹிந்திரா
இன்றைய விலை: 607.90 ரூபாய்
டார்கெட் விலை: 720 ரூபாய்
வளர்ச்சி வாய்ப்புகள்: 14 சதவீதம்
#5வது நிறுவனம்
நிறுவன பெயர்: மாருதி சுசூகி
இன்றைய விலை: 9,041.20 ரூபாய்
டார்கெட் விலை: 10,720 ரூபாய்
வளர்ச்சி வாய்ப்புகள்: 21 சதவீதம்
#6வது நிறுவனம்
நிறுவன பெயர்: அவென்யூ சூப்பர்மார்க்கெட்
இன்றைய விலை: 1,123.90 ரூபாய்
டார்கெட் விலை: 1,600 ரூபாய்
வளர்ச்சி வாய்ப்புகள்: 43 சதவீதம்
#7வது நிறுவனம்
நிறுவன பெயர்: எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ்
இன்றைய விலை: 503.80 ரூபாய்
டார்கெட் விலை: 720 ரூபாய்
வளர்ச்சி வாய்ப்புகள்: 40 சதவீதம்
#8வது நிறுவனம்
நிறுவன பெயர்: பீனிக்ஸ் மில்ஸ் லிமிடெட்
இன்றைய விலை: 615.00 ரூபாய்
டார்கெட் விலை: 720 ரூபாய்
வளர்ச்சி வாய்ப்புகள்: 19 சதவீதம்
#9வது நிறுவனம்
நிறுவன பெயர்: மஹிந்திரா பைனான்ஸ்
இன்றைய விலை: 440.50 ரூபாய்
டார்கெட் விலை: 550 ரூபாய்
வளர்ச்சி வாய்ப்புகள்: 26 சதவீதம்
#10வது நிறுவனம்
நிறுவன பெயர்: பெட்ரோநெட் எல்என்ஜி லிமிடெட்
இன்றைய விலை: 244.70 ரூபாய்
டார்கெட் விலை: 290 ரூபாய்
வளர்ச்சி வாய்ப்புகள்: 17 சதவீதம்


Click it and Unblock the Notifications