சென்னை: போலியான இணையதளங்கள் தனிநபர் விவரங்களைக் கேட்கும் போது கவனமாக இருக்க வேண்டும் இந்திய ரிசர்வ் வங்கி நாட்டு மக்களுக்கு வியாழக்கிழமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்தப் போலி இணையதளங்களில் சில ஆர்பிஐ இணையதளங்கள் போன்றே இருக்கும் என்றும் ஆனால் வங்கி கணக்குச் சரிபார்ப்பு முறை போன்றவற்றைப் போலியாக வைத்து இருப்பார்கள் என்றும் எச்சரித்துள்ளனர்.
பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
வித்தியாசம் என்ன?
இந்திய மத்திய வங்கியான ஆர்பிஐ தனிநபரின் விவரங்கள், வங்கி கணக்கு விவரங்கள் அல்லது கடவுச்சொல் போன்றவற்றைக் கேட்காது. போலி இணையதளங்கள் தனிநபர் விவரங்களைப் பெறும் என்றும் அதனை மொசடி செய்து உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கவும் வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.
செயலி
அன்மையில் சில வருடங்களுக்கு முன்பு ஆரிபிஐ வங்கி பெயரில் போலியாகக் கிரெடிட் கார்டு விநியோகம் செய்வதாக மொபைல் செயலி மூலம் தனிநபர் விவரங்களைப் பெற்று மோசடி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. பின்னர் இந்தச் செயலியில் அப்படி என்ன தான் இருக்கின்றது என்று பார்த்தால் ஆர்பிஐ லோகோ இல்லை, அனைத்து வங்கி கணக்கின் விசாரணை எண் மற்றும் வங்கிகளின் வாடிக்கையாளர் சேவை மையங்கள் எண் போன்றவை மட்டுமே இருந்தன.
போலி இணையதளங்கள்
உதாரணத்திற்கு www.indiareserveban.org என்ற இணையதளம் ஆர்பிஐ இணையதளம் போன்றே போலியாக உருவாக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும் ஆர்பிஐ போன்று www.rbi.org, www.rbi.in மற்றும் பல போலி இணையதளங்கள் உள்ளன. இவை ஆர்பிஐ இணையதளங்கள் இல்லை என்பதால் கவனமாக இருக்க வேண்டும் என்று ஆரிபிஐ வங்கி தெரிவித்துள்ளது.
அதிகாரப்பூர்வ இணையதளம்
எது தான் ஆர்பிஐ அதிகாரப்பூர்வ இணையதளம் என்று நீங்கள் கேட்பது தெரிகிறது. https://www.rbi.org.in என்பதே ஆர்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் ஆகும்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications