இந்தியாவின் புவியியல் கணக்கெடுப்பு அமைப்புச் சமீபத்தில் ராஜஸ்தானில் நடத்திய முக்கியமான ஆய்வில் நாட்டின் வர்த்தக நிலையை முழுமையாக மாற்றும் ஒரு தகவல் கிடைத்துள்ளது.
ஆம், இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை அதிகளவில் கச்சா எண்ணெய் மற்றும் தங்கத்தின் இறக்குமதியின் வாயிலாகவே வருகிறது. இதனைத் தீர்க்கும் வகையில் சுமார் 11.48 கோடி டன் தங்க படிமம் ராஜஸ்தான் பகுதியில் கண்டுப்படிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான்
இந்தியாவின் புவியியல் கணக்கெடுப்பு அமைப்பு நடத்திய இந்த ஆய்வின் படி 11.48 கோடி டன் தங்கம் ராஜஸ்தான் மாநிலத்தின் முக்கிய நகரங்களான பனஸ்வாரா மற்றும் உதய்பூர் பகுதியில் இருப்பதாகக் கண்டுபிடித்துள்ளது.
தங்கம்
இந்தத் தங்க படிமம் பூமிக்கு அடியில் சுமார் 300 அடி தூரத்தில் உள்ளதாக இந்தியாவின் புவியியல் கணக்கெடுப்பு அமைப்பின் தலைவர் குடும்ப ராவ் செய்தியாளர்களுக்குத் தெரிவித்துள்ளார்.
தேடல்
இந்த ஆய்வு செம்பு மற்றும் தங்க படிவத்திற்காக நடத்தப்பட்ட நிலையில் வெற்றிக்கிடைத்தது மட்டும் அல்லாமல் பிற தாதுகளும் கிடைத்துள்ளது.
மேலும் ஆய்வுகள் சிக்கார் மாநிலத்தின் நீம் கா தானா பகுதியில் நடந்துகொண்டு இருப்பதாக ராவ் தெரிவித்தார்.
பிற தாதுகள்
தங்கம் மற்றும் செம்பு ஆகியவற்றைத் தாண்டி துத்தநாகம் (zinc) மற்றும் ஈயம் ஆகிய தாதுகளின் படிமமும் இந்த ஆய்வில் கிடைத்துள்ளது.
இதில் ஈயம் மட்டும் சுமார் 350 மில்லியன் டன் அளவிலான படிமம் கிடைத்துள்ளது.
செம்பு
இந்த ஆய்வின் மூலம் ராஜஸ்தானில் மட்டும் சுமார் 80 மில்லியன் டன் அளவிலான செம்பு படிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?



Click it and Unblock the Notifications