இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாகத் திகழும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 2016-17ஆம் நிதியாண்டில் சுமார் 20,339 கோடி ரூபாய் அளவிலான கடனை தள்ளுபடி செய்துள்ளது.
இது இந்தியாவில் இருக்கும் பிற வங்கிகளை விடவும் மிகவும் அதிகமாக உள்ளது. இக்காலகட்டத்தில் இந்திய பொதுத்துறை வங்கிகள் சுமார் 81,683 கோடி ரூபாய் அளவிலான கடனை தள்ளுபடி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இக்காலகட்டத்தில் எஸ்பிஐ வங்கியின் கிளை வங்கிகள் இணைக்கப்படாத போது தள்ளுபடி செய்யப்பட்டது.

2012-13ஆம் நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகள் சுமார் 27,231 கோடி ரூபாய் தள்ளுபடி செய்தது. கடந்த 5 வருடத்தில் இதன் அளவு 5 மடங்கு அதிகரித்துள்ளது.
2013-14 நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகள் 34,409 கோடி ரூபாய், 2014-15 நிதியாண்டில் 49,018 கோடி ரூபாய், 2015-16 நிதியாண்டில் 57,585 கோடி ரூபாய், 2016-17ஆம் நிதியாண்டில் 81,683 கோடி ரூபாய் அளவிலான கடனை தள்ளுபடி செய்துள்ளது.


Click it and Unblock the Notifications