இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாகத் திகழும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா உலகத் தரத்திற்கும், உலக நாடுகளில் இருக்கும் முன்னணி வங்கிகளுக்கு இணையாகப் போட்டிப்போடவும் மோடி தலைமையிலான அரசு அதன் கிளை வங்கிகளை இணைந்து ஒற்றை முனை வங்கியாக மாற்றியது.
இதேவேளையில் இந்திய வங்கிகளில் வராக்கடன் அளவு தொடர்ச்சியாக அதிகரிக்கத் துவங்கியது. இதில் ஸ்டேட் பாங்க் இந்தியாவும் அடக்கம்.
எஸ்பிஐ வங்கி
எஸ்பிஐ வங்கி இதுவரை அறிவித்த வராக்கடன் அளவிலும் உண்மையான வராக்கடன் அளவிற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளதை ரிசர்வ் வங்கி செய்த தணிக்கை ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
வாரக்கடன்
ரிசர்வ் வங்கி சமீபத்தில் எஸ்பிஐ வங்கியின் கணக்குகளைத் தணிக்கை செய்ததில் மார்ச் 2017 காலாண்டில் சுமார் 3.6 பில்லியன் டாலர் ஆதாவது 23,200 கோடி ரூபாய் அளவிலான வராக் கடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
15 சதவீத வித்தியாசம்
எஸ்பிஐ அறிவித்த மார்ச் 2017 வராக்கடன் அளவிற்கும் ரிசர்வ் வங்கி அறிவித்த வராக்கடன் அளவிற்குச் சுமார் 15 சதவீதம் வித்தியாசம் உள்ளது என்ற உண்மையை ஆர்பிஐ வெளியிட்டுள்ளது.
இதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் இன்று மிகப்பெரிய அதிர்ச்சி வெடித்துள்ளது.
தனியார் வங்கிகள்
மேலும் தனியார் வங்கி பிரிவில் எச்டிஎப்சி வங்கி 2,050 கோடி ரூபாய் அளவிலான வராக் கடனை வைத்துள்ளதாகவும், ஐசிஐசிஐ வங்கியின் வராக்கடன் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து இவ்வங்கி குறித்த ஆய்வு தற்போது அவசியமில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
தவறை ஒப்புக்கொண்ட எஸ்பிஐ
எஸ்பிஐ வங்கி அறிவிக்கப்பட்டுள்ள வராக் கடன் அளவிற்கும் தற்போது ரிசர்வ் வங்கி கண்டுபிடித்துள்ள வராக்கடனுக்குமான வித்தியாசம் 15 சதவீதமாக உள்ளதை எஸ்பிஐ வங்கி நிர்வாகம் ஒப்புக்கொண்டது.
மேலும் எஸ்பிஐ வங்கி வர்த்தகம் மற்றும் லாப நஷ்ட அளவுகளை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இணையாகப் பார்க்கப்படுவதால் இத்தகைய முறைகேடான அளவுகளை அறிவித்துள்ளதாகத் தெரிகிறது.
உலகளவில்
இதன் மூலம் எஸ்பிஐ வங்கி தான் உலகளவில் அதிகளவிலான வராக்கடனை வைத்துள்ள வங்கியாகத் தற்போது உருவெடுத்துள்ளது.
டிசம்பர் 31 உடன் முடிந்த காலாண்டில் எஸ்பிஐ வங்கியின் மொத்த கடனில் 10.35 சதவீத தொகை வராக்கடனாக உள்ளது. இது செப்டம்பர் காலாண்டில் 9.83 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பொய் கணக்கு
நாட்டின் மிகப்பெரிய வங்கியாக இருக்கும் எஸ்பிஐ வங்கியே தவறான கணக்குகளை அறிவித்துள்ள நிலையில், இந்திய வங்கித்துறை எவ்வளவு மோசமான நிலையில் உள்ளது என்பது தெரிகிறது என வங்கித்துறை ஆய்வாளர் ஹேமின்திரா ஹசாரி தெரிவித்துள்ளார்.
எஸ்பிஐ பங்குகள்
இன்றைய வர்த்தகத்தில் எஸ்பிஐ வங்கி பங்குகள் சுமார் 2.40 சதவீதம் வரையில் சரிந்து 287.45 ரூபாய் வரையில் சரிந்தது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications