இந்திய பொதுத்துறை வங்கிகளில் குவிந்துக்கிடக்கும் வாராக் கடன் அளவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவது மட்டும் அல்லாமல் வங்கிகள் காட்டும் வாராக் கடன் கணக்கிலும் அதிகளவிலான வித்தியாசம் உள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்நிலையில் ரிசர்வ் வங்கி வாராக் கடன் பிரச்சனையைத் தீர்க்கும் வரைமுறைகளில் புதிய மாற்றங்கள் கொண்டு வந்துள்ளது.
ரிசர்வ் வங்கி
மத்திய வங்கியாக விளங்கும் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில், 2,000 கோடி ரூபாய் மற்றும் அதற்கு அதிகமாக இருக்கும் வராக்கடன் கணக்கிற்கு 180 நாட்களுக்குள் resolution plan அதாவது தீர்மான திட்டத்தை வகுக்க வேண்டும் என அனைத்து வங்கிகளும் உத்தரவிட்டுள்ளது.
வங்கிகளுக்குப் பிரச்சனை
இதன் மூலம் வங்கிகள் சேர்த்து வைத்திருக்கும் வாராக் கடன் சுமையைக் குறைக்க முடியும் என்றாலும், வங்கிகளின் நிதிநிலை அறிக்கை அதிகளவில் பாதிக்கப்படும். நீண்ட கால நோக்கில் பாதிப்புகள் கூடுதலாகவே இருக்கும் எனக் கூறலாம்.
4வது காலாண்டு
வராக்கடன் அளவுகள் குறையும் என்று பார்க்கும் போது இத்திட்டம் சிறப்பான திட்டமாகவே உள்ளது, ஆனால் 2017-18 நிதியாண்டின் 4வது காலாண்டுக்குள் அடுத்த ஆண்டில் வராக்கடனாக மாறும் கணக்குகளைப் பட்டியலிட வேண்டும் என்பதால் வங்கிகளின் லாப அளவுகள் குறைந்து, வாராக் கடன் சுமை அதிகரிப்பு போன்ற பாதிப்புகள் சற்று அதிகமாகவே இருக்கும் எனத் தெரிகிறது.
அதுமட்டும் அல்லாமல் வங்கி பங்குகளும் அதிகளவிலான சரிவை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாராக் கடன் அளவு
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வாராக் கடன் குறித்த அறிவிப்பில், இந்திய வங்கித்துறையில் மார்ச் 2018ஆம் ஆண்டுக்குள் மொத்த வாராக் கடன் அளவு 10.8 சதவீதத்தைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது என அறிவித்துள்ளது.
மார்ச் 2017இல் இதன் அளவு 9.6 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மொத்த வராக்கடன்
இன்றைய நிலையில் இந்திய வங்கிகளில் குவிந்துக்கிடக்கும் மொத்த வாராக் கடன் அளவு 8.5 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
மாற்றங்கள்
இதுவரை வங்கிகள் கார்ப்ரேட் கடன் மறுசீரமைப்புத் திட்டம், SDR, S4A திட்டங்களின் கீழ் தீர்மான திட்டங்கள் எடுக்கப்பட்டு வந்தது.
தற்போது ரிசர்வ் வங்கி அறிவிப்பினால் பழைய முறைகள் அனைத்தும் நீக்கப்பட்டுப் புதிய தீர்மான திட்டத்தின் படி வங்கிகள் இயங்க வேண்டும்.


Click it and Unblock the Notifications