இந்தியாவின் மிகப் பெரிய ஆப் டாக்ஸி நிறுவனமான ஓலா மனிதவள மற்றும் நிர்வாகத் தலைவரான யகுந்தர் சைக்கியா ஊழியர்களைப் பணிக்கு எடுப்பதில் கன்சல்டன்சி ஒன்றுடன் சேர்ந்துகொண்டு மோசடி செய்துள்ளதாக விசாரணை வலையில் சிக்கியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஓலா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளரை இது குறித்துத் தொடர்புகொண்டு விசாரித்த போது நிறுவனத்திற்குள்ளேயே விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் ஆனால் முழு விவரங்களையும் தற்போதைக்குக் கூற முடியாது என்றும் தெரிவித்தார்.
யகுந்தர் சைக்கியா
2015-ம் ஆண்டு முதல் யகுந்தர் சைக்கியா ஓலா நிறுவனத்தின் மனிதவள துறை அதிகாரியாகப் பதவியேற்ற பிறகு கூடுதலாக மூத்த நிர்வாகத் தலைவர் பதவியையும் சில மாதங்களில் சேர்த்து பார்க்கத் துவங்கியுள்ளார்.
மோசடி
தற்போது ஊழியர்களைப் பணிக்கு எடுக்கும் கன்சல்டன்ஸி நிறுவனத்துடன் கைகோர்த்துக்கொண்டு அதிக ஊழியர்கள் பணிக்கு எடுப்பது அவர்களுக்கான பணப் பரிவர்த்தனை செய்யப்பட்ட பிறகு அவர்களை ரிஜக்ட் செய்வது மில்லியன் கணக்கில் மோசடி செய்துள்ளதாக விசாரனை செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
விசாரணை
ஜனவரி மாதம் முதல் நிறுவனத்தின் விசாரணைக்கு யகுந்தர் சைக்கியா ஒத்துழைப்பும் அளித்து வருகிறார் என்றும் தற்போது ராஜிநாமா செய்துள்ளதாகவும் மார்ச் மாதம் வரை அறிவிப்புக் காலத்தில் உள்ளதாகவும் விசாரணைக்கு வந்தால் மட்டும் போதும் என்றும் எந்த வேலையும் செய்யக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஓலா
ஓலா நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு 4 பில்லியன் டாலர்களை விட் ஆதிகமாகும். ஜப்பானின் சாப்ட் வங்கி மற்றும் சீனாவின் டென்சண்ட் கார்ப்ரேஷன் உள்ளிட்ட நிறுவனங்கள் ஓலாவின் முக்கிய முதலீட்டாளர்கள் ஆவார்கள். இந்திய நிறுவனமான இதில் டாக்ஸி மட்டும் இல்லாமல் ஆட்டோ மற்றும் வாலெட் சேவையும் வழங்கப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications